Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொட்டும் பனி, குளிர் – 15 பாகைக்கு இறங்கி இரத்தத்தை உறைய வைத்தது.. அப்படியிருந்தும் உறைந்து போகாத மாவீர தியாகங்கள்

இம்முறை நோர்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்விற்கு பெருந்திரளான மக்கள் வந்து கலந்து கொண்டது , முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல..! , என்ற உண்மையை சிங்கள ஆட்சியாளருக்கும், உலகத்திற்கும் தெட்டத் தெளிவாக உரைத்துவிட்டுப் போயிருக்கிறது..

ஒஸ்லோவில் வழக்கமாய் மாவீரர்தினம் நடைபெறும் மண்டபம் கிடைக்காத காரணத்தால் கெல்ஸ்புயர் என்னும் நகரில் உள்ள வல்லகோவன் என்னும் மாபெரும் உள்ளரங்க மைதானம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மாவீரர் குடும்பங்களுக்காய் நூற்றுக்கணக்கான இருக்கைகளுடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

போடப்பட்ட அத்தனை இருக்கைகளும் நிறைந்து, ஆயிரக்கணக்கான மக்கள் நின்ற நிலையிலேயே மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே பாடல் ஒலித்தபோது, பலருடைய கண்களில் இருந்து உருண்டோடிய கண்ணீர் முத்துக்கள் தீப ஒளியில் பளிச்சிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. அத்தகைய உணர்வுடன் மாவீரர் தீபச்சுடர் ஏற்றப்பட்டது.

நோர்வேயில் கடந்த 91 வருடங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகக் கடுமையான நவம்பர்மாதக் குளிர் அன்று நிலவுகிறது என்று காலநிலை அவதானிப்பு நிலையத்தினர் அறிவிப்பு வெளியிட, -15பாகை செல்சியசிற்கு குளிர் உறைந்து போய்விட, அதனை எல்லாம் பொருட்படுத்தாது அந்த வல்லகோவன் அரங்கில் மக்கள் இவ்வளவு பெருந்திரளாகக் கூடினார்கள். இது இன்றல்ல இன்னும் நூற்றாண்டுகள் கடந்தாலும் மறக்க முடியாத சாதனை. அது மட்டுமல்லாமல் தமீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தொடங்கி வைத்த மாவீரர்நாள் நிகழ்வையும், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான தமிழர்களுக்குரிய பொறுப்பையும் நாம் ஒருபோதம் கைவிடப்போவதில்லை என்று கட்டியம் கூறுவதாய் இருந்தது.

இம்மாவீரர்தின நிகழ்வில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் ஏற்பாட்டாளர்களும் மற்றும், ஒஸ்லோ நகர பேருந்து ஓட்டுநர்களாகிய தமிழர்களும்தான். ஒஸ்லோ நகரின் பல பக்கங்களிலிருந்தும் இலவச பேருந்துகள் மூலம் மக்கள் அரங்குவரை கொண்டுவந்து விடப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் கார் தரிப்பிடங்களில் இருந்து சுமார் 300 மீட்டர் தாரத்திற்குக்கூட பேருந்துகள் விடப்பட்டதை மனமாரப் பாராட்டினார்கள்.

இம்முறை நோஸ்க் தொலைக்காட்சிகளில் பட்டை கிளப்பிய நவம்பர் மாத விளம்பரங்களில் முன்னணி வகித்தது கையுறைகள், பாதணிகளுக்கான விளம்பரங்களே. குளிர் -20 பாகை செல்சியஸ்சிற்கும் கீழாக போகும் இதற்கு தாக்குப்பிடிக்கக் கூடிய கையுறைகள், பாதணிகள் இவை என்று விளம்பரங்கள் அலற வைத்தன. அப்படி விளம்பரப்படுத்தப்பட்ட பாதணிகள் கையுறைகள் கூட அன்றைய நாளின் குளிருக்கு தாக்குப்பிடிக்கவில்லை என்பதுதான் உண்மையான செய்தியாகும்.

ஒஸ்லோ நகர பேருந்துத் திணைக்களம் மாவீரர் தினத்திற்கான தனது முழுமையான இலவச சேவைகள், புலிக்கொடிகள் பறந்தவண்ணம் காணப்பட்ட பல பேருந்துகள் இவைகளை எல்லாம் பார்த்தபோது அடடா.. தமிழீழ தேசத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்ற ஓர் உணர்வே ஏற்பட்டது.

வழக்கமாக மாவீரர் நிகழ்வுக்கு வருவோரைவிட இம்முறை மக்கள் அதிகமாக வந்திருந்ததாக பலர் பேசிக்கொண்டது தெளிவாக எங்கும் ஒலித்தது. இம்முறை நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வானது முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல ஆரம்பம் என்கின்ற ஒரு புதிய செய்தியை சங்கநாதமாய் முழங்கியுள்ளது.

பொங்கு தமிழுக்கு இன்னல் விழைந்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு..

நோர்வேயிலிருந்து மகேசன் 07.12.2010

1 Response to முள்ளிவாய்க்கால் முடிவல்ல நோர்வே மாவீரர்நாள் 2010

  1. Unknown Says:
  2. முடியும் என்று முடிவு செய்-முயச்சி திருவினையாகும் .

    தமிழீழம் ,தமிழுக்கு தாயகமாக மலரும்...


    yours reverently

    Shiva Prem ( Premavan)
    “Divine” Film Director / Cinematographer,
    Tamil Nadu, INDIA.
    Cell-+91 944 44 52 167
    directorshivaprem@gmail.com --- premavan@gmail.com
    -- --------------- =========

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com