Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் தொடர்ந்தும் அமெரிக்க உன்னிப்பாக கவனித்து வருவதாக எச்சரித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜனநாயக மனித உரிமைகள் மற்றும் தொழில் துறை பிரதியமைச்சர் மைக்கல் போஸ்னர் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளார்.

நாங்கள் தொடர்ச்சியாக இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களை கண்காணித்து வருகின்றோம். அதில் மாற்றம் இல்லை.

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்தது என்னவென்பதையும் நாங்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அது மாத்திரமன்றி .நா. நிபுணர்கள் குழு இலங்கை விடயத்தில் எப்படிச் செயல்படப் போகின்றது என்பதையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

மேற்குலக நாடுகளின் கண்களில் தொடர்ச்சியாக விரல் விட்டு ஆட்டலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் ஆணவத்துக்கு இந்த அறிக்கை ஒரு பலத்த அடியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

0 Responses to இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களை கண்காணித்து வருகின்றோம்: அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com