Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நியூயோர்க் மன்ஹட்டான் நகர மத்தியில் அமைந்துள்ள அமெரிக்கர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னமான சுதந்திர தேவிச் சிலை சமீபத்தில் சீரமைக்கும் பணிகள் முடிவடைந்து ஞாயிற்றுக் கிழமை திறக்கப்பட்டது.

ஆனால் தற்போது மையம் கொண்டிருக்கும் 'சாண்டி' புயலின் உக்கிரம் காரணமாக அது மறுபடி முடப்பட்டிருந்தது.

30 மில்லியம் டாலர்கள் செலவில் மேற்கொள்ளப் பட்ட சீரமைப்புப் பணிகள் காரணமாக இது  கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டிருந்தது. 151 அடி உயரமுள்ள இந்த சிலை புயலின் சீற்றம் தணிந்தால் இன்று அல்லது அதற்கு அடுத்த நாள் திறக்கப் படக்கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

பிரான்ஸ் நாட்டின் அன்பளிப்பாக 1886 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுதந்திர தேவிச் சிலை 1924 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இச்சின்னத்தைப் பார்க்க வருகை தருகிறார்கள் எனவும் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to அமெரிக்க சுதந்திர தேவி சிலை புயலால் மறுபடி மூடல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com