விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி.க்கு(குமரன் பத்மநாதனுக்கு) நேற்றுக் காலை கன்னத்தில் பலமான அடி விழுந்தமையால் அவரின் கையா ட்கள் இங்கு ஆடுகின்றனர் என்று ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதõன நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இவை குழு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது ரவி எம்.பி உரையாற்ற தயாராக இருந்தார்.
இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மேசையில் இருந்த புத்தகமொன்றை காண்பித்து இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டா நாம் இன்று (நேற்று) விவாதிக்கின்றோம். அப்படி விவாதிப்பதாயின் அதில் கே. பி.யிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை எனக் கூறி அமர்ந்தார்.
இதனிடையே எழுந்த ஆளும் கட்சியின் பின் வரிசையை சேர்ந்த சில எம்.பி.க்கள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், “காலையில் வந்தவுடனேயே கே.பி… கே.பி… என்று கொக்கரிக்கின்றீர்களே…” எனக் கோஷம் எழுப்பினர்.
உரையை ஆரம்பிப்பதற்கு எழுந்திருந்த ரவி கருணாநாயக்க எம்.பி., “கே.பிக்கு காலையிலேயே கன்னத்தில் பலமாக அடித்தமையினால் அவரின் அடியாட்கள் சபைக்குள் ஆடுகின்றனர்…” என்று எழுந்திருந்து கூச்சல் செய்த உறுப்பினர்களை பார்த்துக் கூறினார்.
“கருணா, பிள்ளையான் போன்ற புலிகளைப் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு எங்களிடம் கேட்கின்றனர்…” எனக் கூறி தனது உரையைத் தொடர்ந்தார்.

0 Responses to கே.பிக்கு விழுந்த அடி - அவரின் அடியாட்கள் சபைக்குள் ஆடுகின்றனர்