கனடாவின் ஹல்பா பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாலிபர்கள் மூவரும் ஏனையவர்களின் கடன் அட்டைத் தகவல்களை திருட முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கனடா ரொரன்ரோவில் வசிக்கும், சுகிர்தன் ஸ்ரீஸ்கந்தராசா (34 வயது- மட்டக்களப்பு), பரணீதரன் சடாச்சரம் (29வயது- கிளிநொச்சி) மற்றும் தயாபரன் தனநாயகம் (32 வயது- யாழ்ப்பாணம்) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களாவர்.
பிரஸ்தாப வாலிபர்கள் மூவரும் அப்பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளதுடன், வங்கிகளின் தன்னியக்க பணப்பரிவர்த்தனை இயந்திரம் (ஏ.டி.எம்.) மீது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கடன் அட்டைத் தகவல்களைத் திருடும் கருவியைப் பொருத்தியுள்ளனர்.
அதன் பின் அவர்கள் வான் ஒன்றில் இருந்தவாறு கடன் அட்டைத் தகவல்களை திருடிக் கொண்டிருந்த நிலையில் பொலிஸாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளனர். கடந்த 19ம் திகதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொலிசார் அவர்களைக் கைது செய்து காரைச் சோதனையிட்ட போது கடனட்டைகளின் தகவல்களைக் களவாடப் பயன்பட்ட கமெரா ஒன்றும் கடனட்டை உராய்வு இயந்திரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை பிரஸ்தாப இளைஞர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.






0 Responses to கடன் அட்டை மோசடியில் கனடாவில் மூன்று இலங்கை தமிழ்கள் கைது (படங்கள் இணைப்பு)