கொடியவர் ஆடும் கூத்தில் சிக்கியபிடியில் கிடக்கும் தமிழர் வாழ்வு
மீண்டும் மனிதம் இழந்த இருப்பில்
நரகத்தின் நரபலி ஊழித் தாண்டவம்
காலக் கலவரத்தை மிஞ.சி எழும்!
1958 1968 1972 1977 1983—2009
மனிதப் பாசத்துடன் உனை எவனும்
அனுகாது கொடியவன் இன வெறியில்
ஈழத்தை முற்றாய் சிங்களம் அழிக்கும்!
முன்னெடு காலை புறப்பட்ட காளையர்
எங்கே என்றன்று கண்ணீரில் கதறுவாய்
வாழ்ந்த சுவடுயின்றி இருந்த வாழ்வின்றி
சிங்கள இனவெறி இனம்தின்றே முடிக்கும்
இனிவரும் கலவரம் முற்றாய் அழிக்கும்!
துளியும் இரக்கம் இல்லா இனப்பகைவன்
செந்நீர் கொட்டச் சிரித்த பறநாகங்கள்
கன்றும் காளையின் கதறலில் சிங்களத்தி
செவ்விதழ் சுவைத்த கானகத்து மாக்கள்
சிற்பமாய் சித்திரமாய் வார்ப்புத் தமிழிச்சி
அவையங்களை கடிச்சுக்குதறிய சிங்களம்
வளமார் ஊரை சுடுகாடாக்கிய ஆதிவேடர்
தொல்புவி எங்கும் அகதியாக்கிய அரக்கர்
கானக விலங்கையும் கருணையா நோக்கிய
புத்தனின் புத்திரர் சித்தத்தில் தமிழனை
முற்றாய் அழிக்கும் நாளை ஆள்காட்டும்
இனவழிப்பு வித்தை ஒத்திகை நடக்கும்!
ஈரநெஞ்சம் இனியும் இல்லா இனவெறியர்
ஆண்டுபலவாய் நிகழ்த்திய கூத்து முடியும்!
கோரக்காட்சியில் கூவிக்கூவி அழைப்புக்குரல்
முப்பதாண்டு மன்னவன் மாவீரர் கதறலாகும்!
தோல்வியின்; காரணமும் மூச்சுத் திணறும்
ஈழமெங்கும் அழுகுரல் கேட்கும் கூக்குரல்
ஓலியில்: தர்மச்சாலைகள் கைதட்டிச் சிரிக்கும்
புலிகளை அழித்த பெருமையில் நின்றவரும்
இதுகாலப் பயங்கரவாதம் எதுவென காண்பர்!
இதுவும் கண்துடைபென மானிடம் மறுதலிக்கும்;
நீதித்திராசு தமிழன்மட்டில் நசிஞ்சு நொருங்கும்
எலும்புக் காட்டில் தமிழ் இரத்த சகதியில்
தர்மம் குலுங்கிக் குலுங்கி; எக்காலமிடும்
இனிவரும் கலவரம் இனம்தின்று முடிக்கும்!
இதனால் சகலமானவருக்கும் சொல்வது இது!
அக்கினி அணைந்து ஆக்கினை தொடங்கிட்டு
இப்போக்கினில் இனக்கலவரம் வெடிக்கும்….?
சிங்களம் மேலும் தர்மமடங்களை வெருட்டும்
உலகம் தமிழனை அரங்கேற்றாது துரத்தும்
கறுப்பு ஜீலை கறுப்பு மே கேட்பாரின்றிபோக!
இனிவரும் இனக்கலவரப் பிரளயம் புகட்டும்!!
அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to இனிவரும் இனவழிப்பில்: கவிதை