Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலேசியா பினாங்கு மாநிலத்தில் (05.12.2010) இன்று காலை 10 மணியளவில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. தங்களது எழுச்சிமிகு உணர்வுகளை வெளிப்படுத்த வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கு மலர்வணக்கமும் தீபவணக்கமும் செலுத்தி அவர்கள் இலட்சியக்கனவை நிறைவேற்றுவோம் என உறுதியெடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசியர் டாக்டர் பி.இராமசாமி, "வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் தாயகத்தின் விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம்" என உணர்ச்சி மிக்க உரையினை நிகழ்த்தினார்.

அத்தோடு அங்கு வருகை தந்திருந்த தமிழீழ உணர்வாளர்கள் பலர் தத்தமது உணர்ச்சிகளை உரைகள் மூலமும் கவிதைகள் மூலமும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ் உணர்ச்சி மிக்க நிகழ்வில் தமிழீழ வரலாற்றுச் சான்றாக எல்லாளன் திரைக்காவியம் திரையிடப்பட்டது.

இறுதியாக "விழ விழ எழுவோம்" என்ற உணர்ச்சிமிக்க பாடலுடன் மாலை மணி 3 அளவில் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.















0 Responses to மலேசியாவில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com