அரசு உங்களுடைய கையில்! ஆட்சி உங்களுடையை கையில்! இராணுவம் உங்களுடைய கையில்! படைப்பலமும் உங்களுடைய கையில்! ஆனால்,நீங்கள் பயப்படுவதுதான் எங்களுக்கு ஆச்சரியத்தை தருகின்றது. ஆனபடியால் நீங்கள் இதைவிட்டுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என மாவை சேனாதிராசா சிறிலங்கா அரசை கேட்டுக்கொண்டார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியாற்றிபோதே இக்கோரிக்கையை விடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கலந்துகொண்டு தெரிவித்ததாவது
இலங்கையினுடைய வரலாற்றில், தமிழர்கள் வடக்கிலே தனியான ஓர் அரசைவன்னி, யாழ்ப்பாண அரசையும் சிங்களவர்கள் தெற்கில் கண்டியிலே ஒரு தனியான அரசையும் நிருவகித்த வரலாறு இருந்தது என்பதைத் தற்பொழுது நான் மிகவும் தேவைகருதி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக் காலத்தில் இருந்த அரச தலைவர்கள், அவர்களுடைய ஆட்சி வசதிகளுக்காகநிருவாக வசதிக்காகஅவற்றினை ஒன்றிணைத்தார்கள்.
அதற்குப் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுடைய தலைவராகவும் அக்கட்சியை ஆரம்பித்தவருமான முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அன்று "ஒக்ஸ்போர்ட்' பல்கலைக்கழகத்தில் இருந்து நாடு திரும்பியதற்குப் பிறகு "த மோனிங் லீடர்' பத்திரிகையிலே 1920 களில் 4 கட்டுரைகளை எழுதினார். அவர்
அதிலே "இந்த நாட்டிலே இருக்கின்ற பிரச்சினைகளுக்கு ஒரு சமஷ்டி அரசு முறையின் மூலமான தீர்வுதான் சிறந்தது' என்று குறிப்பிட்டிருந்தார். அவை மிக நீண்ட கட்டுரைகள்.
கண்டியத் தலைவர்கள் "டொனமூர்' ஆணைக்குழுவுக்கு முன்னரும் "சோல்பரி' ஆணைக்குழுவுக்கு முன்னரும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கையை மூன்று தனித்துவமிக்க பிரதேசங்களாக அடையாளப்படுத்தி கண்டி அரசு, வடக்குகிழக்கு இணைந்த அரசு,தாழ்நில சிங்கள அரசு என மூன்று சுயாட்சி அலகுகளாகவும் மூன்று ஆட்சி நிலை அரசுகளும் ஒன்றிணைந்து பொதுநலன் கருதி மத்தியில் ஒரு சமஷ்டி அரசாகவும் செயல்பட வேண்டும் என்ற ஒரு பிரேரணையை அவர்கள் அன்று கொண்டுவந்தார்கள்.
இந்த அடித்தளத்தில்தான் பண்டாரநாயக்க தந்தை செல்வநாயகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் அன்று ஒரு முன்னேற்றகரமான உடன்பாடாக அமைந்திருந்தது. அந்த அடிப்படைத் தத்துவத்தையும் இந்த நடைமுறைத் தீர்வுத் திட்டத்தையும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் பல சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொண்டிருந்தன. அதனை அரசியலமைப்புகளும் ஏற்றுக்கொண்டிருந்தன என்பதை நான் இங்கு திட்டவட்டமாகச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
நான் ஏன் இதனைக் குறிப்பிடுகின்றேனெனில் தந்தை செல்வநாயகம் "தமிழ் மக்கள் ஒரு தனித்துவம் மிக்க தேசிய இனம். இவ் இனத்தினருக்கு வரலாற்று ரீதியாக ஏற்பட்டுள்ள அனுபவங்களின் காரணமாக வடக்கு, கிழக்கு மாநிலத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அந்த மாநிலம் தனியானதாக இருக்க வேண்டும் என்பதுடன் அப்பிரதேசத்திலே அந்த மக்களுடைய வாழ்விடங்கள் உறுதிப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அங்கு அவர்கள் சுயாட்சிக்கு உரியவர்களாக ஆட்சி செய்ய வேண்டும்' என்ற சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்தைக் கொண்டிருந்தவர். அதே தந்தை செல்வநாயகம் தானடைந்த அனுபவம் காரணமாக 1976 ஆம் ஆண்டிலே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியவர். நான் அது பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தோன்றிய காலத்தில் அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து இன்றைய ஜனாதிபதியின் தந்தையார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்தார். அவ்வாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்தவரின் வரலாற்றுப் பின்னணியிலுள்ள மகிந்த ராஜபக்ஷ இன்று இந்நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார்.
இந்த நாட்டின் நாங்கள் எங்களுக்கென்று ஒரு பாதுகாப்பான பிரதேசம் இருக்க வேண்டும் என்றும் அப்பிரதேசத்திலே நாங்கள் மாநில ஆட்சி அடிப்படையில் ஒரு கூட்டாட்சியை ஏற்படுத்தி ஆட்சி செய்ய வேண்டும் என்றும் கூறுவதெல்லாம் நான் இப்பொழுது குறிப்பிட்ட இந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவையாக இருக்கின்றன.
இன்று தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளம் அழிக்கப்படக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அந்த அடையாளத்தைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் தனித்துவமான ஒரு இனம், தனித்துவமான வரலாற்று ரீதியான ஒரு மொழியைக் கொண்டவர்கள், இந்நாட்டிலே ஆட்சி செய்தவர்கள் எங்களுடைய இனத்தினுடைய அடையாளத்தையும் கலை, கலாசாரப் பண்பாடுகளையும் பேணிப் பாதுகாப்பதற்காக எங்களை நாங்களே ஆள வேண்டும் என்ற தத்துவத்தைக் கொண்டுதான் இத்தனை ஆண்டு காலமும் இந்த நாட்டிலே அரசியல் வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
தந்தை செல்வாவினால் "நாங்கள் ஒரு தமிழ்த் தேசிய இனம். ஐக்கிய இலங்கைக்குள் எங்களுடைய பாதுகாப்பைத் தேடிக்கொண்டு எங்களுடைய மண்ணிலே வாழ வேண்டியவர்களாக இருக்கிறோம்' என்ற சித்தாந்தம் வகுக்கப்பட்டு அதற்கான காரணங்கள் எழுந்துள்ள காரணத்தினால் எங்களுடைய இனம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக அந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியவர்களாக இருந்து வந்துள்ளோம். இதுவே வரலாற்று உண்மை.
இப்பொழுது போர் முடிவடைந்து விட்டதன் பின்னர் இந்த வரலாற்றுக் காரணிகள், தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளம் அவர்களுக்குரிய வாழ்விடங்கள் அழிந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டு வருவதன் காரணமாகத்தான் நான் இவ்வளவு தூரம் வரலாற்றுப் பின்னணியைச் சொல்ல வேண்டியவனாக இருந்தேன்.
நான் மிகச் சுருக்கமாகச் சொல்வதாயின்இச் சபையிலே என்னுடைய நண்பர் அமைச்சர் பஸில் ராஜக்ஷ இருக்கிறார். அவரும் நாங்களும் யாழ்ப்பாணத்திலே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வருகை தந்தபொழுது சந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. எங்களைத் தங்களுடன் வருமாறு அவர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றார்.
எங்கள் பிரச்சினைகளைப் பற்றி எங்களுடன் பேசித் தீர்க்க வேண்டுமென்று அவர் கருதுவது எங்களுக்குத் தெரியும். நான் இந்த பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்பிருந்தே பலஸ்தீன நட்புறவு அமைப்பிலே அங்கத்தவனாக இருக்கின்றேன். ஜனாதிபதியும் நாங்களும் அந்த அமைப்பிலே ஒன்றாகச் செயற்பட்டவர்கள். ஜனாதிபதியும் நாங்களும் அமைச்சரான என்னுடைய நண்பர் வாசுதேவ நாணயக்கார உட்படஅன்று பலஸ்தீனத்தில், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி ஒன்றாகக் கையெழுத்திட்டு ஜெனீவாவுக்கு விண்ணப்பங்களை அனுப்பியவர்கள். இந்த ஆண்டிலும்கூட நான் அந்த நிகழ்வை உற்று நோக்கினேன்.
நான் இப்பொழுது அதைக் குறிப்பிட விரும்புவது ஏனென்றால், ஸியோனிச கொள்கையின்படி இஸ்ரேலியர்கள் எப்படி பலஸ்தீனர்களுடைய வாழ்விடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்களோ, அந்த நிலத்தை அபகரித்து அந்த மக்களை எப்படித் துரத்தினார்களோ, அவர்களை எப்படி அந்த மண்ணிலேயே கொன்று குவித்தார்களோ அதைப்போன்ற நிகழ்வுகள் எங்களுடைய தமிழ்ப் பிரதேசத்திலும் இடம்பெறுகின்றன என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்டத்தான். ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ என நாங்கள் எல்லோரும் பலஸ்தீனத்தை ஆதரித்தவர்கள். இஸ்ரேலிய ஸியோனிசவாதத்தை எதிர்த்தவர்கள், ஓரணியிலே நின்று குரல்கொடுத்தவர்கள்.
அதேபோன்று சூழ்நிலைகள் உங்களுடைய ஆட்சியிலே இங்கு ஏற்படக்கூடாது. அவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒரு வரலாற்றுக்குரிய இனமான தமிழ்த் தேசிய இனம் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்தக் கருத்துகளை எங்களுடைய நட்பைச் சுட்டிக்காட்டி எடுத்துச் சொன்னேன். இந்த நாட்டிலே இருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஒத்துழைக்க நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம். பலமுறை அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதி இரண்டாவது முறையாகப் பதவியேற்றதற்குப் பிறகு இந்தியாவின் "இந்து' நாளேட்டுக்கு ஒரு செவ்வி வழங்கினார். அதனுடைய பிரதம ஆசிரியர் ராம் இப்படிக் கேட்கின்றார்.
'It is notable that tamil national Alliance or the people who are now in TNA have for the first time said they would accept a devolution package within the framework of a united Sri Lanka. How do you see that?’ என்று கேட்டதற்கு ஜனாதிபதி 'It is good developmet. Because earlier they wanted a seperate. It is a very good development. We can now start talking to them' என்று சொல்கிறார்.
பல தடவைகள் அவருடன் சந்திப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், தீர்வு எப்போது எட்டப்படுமென்பது எங்களுக்கே தெரியாமல் இருக்கின்றது. தீர்வு வருவதற்கு முன்னரே எங்களுடைய இனம் மேலும் அவலத்துக்குள்ளாகி அதனுடைய இன அடையாளத்தையே இழந்துவிடுமென்ற அச்சத்தினால்தான் நாங்கள் இப்பொழுது நல்லெண்ணத்துடன் இந்த இடத்திலே பேசிக்கொண்டிருக்கின்றோம்.
சென்ற சில நாட்களுக்கு முன்னர் நாவற்குழியில் சிங்கள மக்களைக் கொண்ட ஒரு கூட்டத்தினர் ஏற்கனவே தாங்கள் அங்கு குடியிருந்தவர்கள் என்று கூறி அங்கே குடியேற வந்தார்கள். அவர்கள் அங்கே குடியிருந்தவர்களாக இருந்தால் ஆவணங்களின் அடிப்படையிலே அவர்கள் எங்கு குடியிருந்தார்களோ, அங்கே குடியிருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்று அரச அதிபருக்கு நாங்கள் சொன்னோம். எங்களுடைய பதிலை பத்திரிகை வாயிலாகவும் சொன்னோம். சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி "அவர்கள் அங்கே போய் குடியேறுவதில் என்ன தவறு“ என்று கேட்கின்றார். அந்தக் கேள்வி சரியானதுதான்.
அதாவது அவர்கள் முன்பு அங்கு வாழ்ந்தவர்களாக இருந்தால் அது சரி. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு சிறுபான்மைத் தேசிய இனம் அல்லது தனித்த ஒரு தேசிய இனம். உலக அரங்கிலே ஐ.நா.வினுடைய தீர்மானத்தின் அடிப்படையில் நாங்கள் மொழியால், வரலாற்றால், கலாசாரத்தால் அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க சுயநிர்ணய உரிமையுள்ள ஓர் இனம். இலங்கையின் மொத்தச் சனத்தொகையைப் பார்க்கின்றபோது எண்ணிக்கையிலே குறைந்த தொகையினராக இருக்கின்ற காரணத்தினால் அந்த இனத்தினர் தாம் இன்றைக்கு அழிக்கப்பட்டுவிடுமோ என்று அச்சம் கொண்டிருக்கின்றது. ஆனால், பெரும்பான்மை இனம் அப்படி அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
இலங்கையிலே 74 வீதத்துக்கு மேல் சிங்கள மக்கள் இருக்கின்றார்கள். ஆனால், எங்களுடைய இனத்தினுடைய வரலாற்றில் நாங்கள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டிருக்கின்றோம். எண்ணிக்கையில் குறைந்த இனத்தினர் தாம் அழிக்கப்பட்டு விடுவோம் என்று எண்ணுகின்றபொழுதுதான் பெரும்பான்மை இனத்தினுடைய நல்லெண்ணம் அங்கே வெளிப்பட வேண்டும். அப்படி அவர்களுக்கு அந்த வண்ணம் வராமல் அவர்களைப் பாதுகாக்கின்ற ஒரு நாட்டில்தான் அந்த இனம் சுமுகமாக, சமாதான சகவாழ்வுடன் இருக்க முடியும். அதைத்தான் நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
சிங்கள மக்கள் தாம் விரும்பிய இடத்தில் தனித்தனியாகக் குடியிருப்பது மட்டுமல்ல, நீண்ட காலமாக அதாவது இந்த நாடு சுதந்திரம் பெற்ற அறுபது ஆண்டுகளாகத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெற்றதனால் இந்த இனவிகிதாசாரம், குடிசனப் பரம்பல் தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்திருக்கின்றன. தந்தைசெல்வா போன்ற மிகப் பெரும் தலைவர்கள், அன்று பிரதமராக இருந்த பண்டாரநாயக்கவுடன் அந்தந்தப் பகுதிகளை அந்தப் பகுதி மக்கள் ஆளுவதற்கு மாநிலச் சுயாட்சி அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தங்களைச் செய்தார்கள்.
கொழும்பிலே தற்காலிகமாக வாழ்ந்த 65 ஆயிரம் தமிழ் மக்கள்
சேரிப் புறங்களில் இருப்பவர்கள்வடக்குக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக எங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கின்றது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? ஒரு சிறுபான்மைத் தேசிய இனமான எங்களுடைய குடிப்பரம்பல் பாதிக்கப்பட்டு நாங்கள் மேலும் மேலும் அதிகாரமிழந்தவர்களாக மலினப்படுத்தப்பட்டவர்களாக அழிந்துவிடக்கூடாது என்று நாங்கள் போராடுவது ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தில் வெவ்வேறு காரணங்களைக் காட்டி அந்த 65 ஆயிரம் சேரி மக்களும் வடக்கே போக வேண்டுமென்றால் அதன் அர்த்தம் என்ன? எப்படித்தான் எங்கு தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் சிறுபான்மை இனமாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ஒருபொழுதும் சிங்கள மக்களுடைய பெரும்பான்மைத்துவத்தை விஞ்சிப்போகமாட்டார்கள். இதுதான் அடிப்படைப் பிரச்சினை! அரசு உங்களுடைய கையில்! ஆட்சி உங்களுடையை கையில்! இராணுவம் உங்களுடைய கையில்! படைப்பலமும் உங்களுடைய கையில்! ஆனால்,நீங்கள் பயப்படுவதுதான் எங்களுக்கு ஆச்சரியத்தை தருகின்றது. ஆனபடியால் நீங்கள் இதைவிட்டுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு அங்கே இராணுவக் குடியிருப்புகள்! 1983 ஆம் ஆண்டிலே அதாவது இந்திய அரசு பேச்சுகளில் ஈடுபட்ட காலத்திலே வடக்கு,கிழக்கிலே 13 இராணுவ முகாம்கள் மட்டும்தான் இருந்தன. இன்றைக்கு எங்களுடைய ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இராணுவத்தினுடைய பிரசன்னம் இருக்கின்றது. உங்களுடைய வீட்டுக்குள் இப்படியிருந்தால் நிலைமை எப்படியிருக்கும்? இன்றைக்கு எங்களுடைய மக்கள் தங்களுடைய கலாசாரம்,தங்களுடைய நிலங்கள்,பொருளாதாரம் ஆகியவற்றை இழந்து ஏழைகளானதுடன், வாழ்வதற்கு வழியற்ற வீடுவாசல் இல்லாத நிலம், இல்லாத ஒரு மோசமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு இராணுவத்தினுடைய பிரசன்னத்தைத் தன் வீட்டுக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to அரசு உங்களுடைய கையில்! ஆட்சி உங்களுடையை கையில்! இராணுவம் உங்களுடைய கையில்! ஆனால்...