Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒரே குரலில் முன்வைக்கப்படல் வேண்டும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த பொது முடிவுக்கு வருதல் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரங்கத்துடனான சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற தமிழ் அரங்கத்துடனான சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

இன்றைய சந்திபில் அரங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர். இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விடயங்களை தமிழ் கட்சிகளின் அரங்கத்திடம் வலியுறுத்தியது.

ஒன்று, தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் ஒவ்வொருவரும் தனித்தனியான கருத்துக்களைக் கொண்டிருக்காமல் ஒரே குரலில் தீர்வினை வலியுறுத்துவது. மற்றையது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளான இராணுவக் குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் முடிவினை எட்டுவதற்காக பொது இணக்கப்பாட்டிற்கு வருதல் என்பனவாகும். இதனை அரங்கத்தினரும் ஏற்றுக்கொண்டனர்.

இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வைத்துள்ள தீர்வுத் திட்டத்தினை அரங்கத்தினர் விரும்பினால் பார்வையிடலாம் என்று எம்மால் தெரிவிக்கப்பட்டது. இதன் போது தம்மிடமும் தீர்வுத் திட்டங்கள் உள்ளதாக டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி ஆகியோரும் தெரிவித்தனர்.

இதேவேளை கூட்டமைப்பு மற்றும் அரங்கத்தின் அங்கத்தவர்கள் இணைந்ததான ஒரு குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த குழுவின் பெயர் விபரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்றும் அடுத்த கட்டச் சந்திப்புக்களின் போது ஏனைய விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் சார்பில் மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவசக்தி ஆனந்தன், அரியநேத்திரன், விநோநோகராகலிங்கம், செல்வராசா, சுமந்திரன் ஆகியோரும் அரங்கத்தின் சார்பில் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி, சந்திரகாந்தன் (பிள்ளையான்), குமரகுருபரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் .சித்தார்த்தன் உட்பட்டோரும் பங்குகொண்டிருந்தனர்.





0 Responses to தமிழ்தேசியக்கூட்டமைப்பு - தமிழ்கட்சிகளின் அரங்கம் சந்திப்பு! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com