Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகிலேயே மிகக் கொடூரமான இன அழிப்பு நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நாடான இலங்கைத்தீவில் சிறீலங்கா இராணுவம், அதனை இயக்கும் சிங்கள பேரினவாத அரசு தொடர்பான போர்க் குற்றங்கள் சனல் 4 ன் ஊடாக மிகையாக வெளிவந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளில் இயங்கும் பெண்கள் அமைப்புகளுக்கும், மனிதாபிமானம் மிக்க பொது அமைப்புகளுக்கும் கனேடிய தமிழ் பெண்கள் அமைப்பின் சார்பில் வெளியிடப்படும் உருக்கமாக வேண்டுகோள்.

கடந்த வருடம் மே மாதம் வரை இலங்கைத்தீவில் ஆட்சியில் இருக்கும் சிங்களப் பேரினவாத அரசால் தரை, கடல், வான் வழித்தாக்குதல்கள் மூலம் ஈழத்தமிழரின் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பானது மே 2009 இற்கு பின்னரான காலப்பகுதியில் அகதிமுகாம்களில் தஞ்சமடைந்திருக்கும் பெண்கள், குழந்தைகள், அப்பாவித்தமிழர்கள் மற்றும் சரணடைந்த போராளிகள் என்று இன்னமும் நீண்டு செல்கிறது.

பெண்கள் மீதான கொடிய சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் போன்றன ஆதாரங்களுடன் சனல்4 தொலைக்காட்சியில் வெளிவந்திருப்பதோடு கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு உயிரற்ற அவர்களின் உடல்கள் மீதான வக்கிரத்தனம் அதி உச்சமான இன அழிப்பை மட்டுமல்ல மிகவும் காட்டுமிராண்டிகளின் ஆட்சிநிலையையும் வெளிப்படுத்தி இருப்பதை சனல் 4 வெளிக்கொண்டு வந்துள்ளது.

இன்று ஈழத்தில் வாய் திறந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் இருக்கும் எம் உறவுகளின் குரலாக உங்கள் எல்லோரிடமும் மன்றாடிக் கேட்கிறோம். குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையை வழங்கக் கோரியும், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கு நீதி கிடைக்கக் கோரியும் எங்கள் வேண்டுதலை உங்கள் எல்லோரிடமும் முன்வைக்கின்றோம்.;. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு எம்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் இணைவோம்.

எதிர்வரும் டிசம்பர் 15 ந்தேதி போர்குற்ற ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு கேட்டிருந்ததனைத் தொடர்ந்து இனப்படுகொலைகள் தொடர்பில் மிகக் கொடியதான பல்வேறு வகையான சாட்சியங்கள் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை சென்றடைந்திருக்கின்றன. கைகளுக்குக் கிடைத்த சாட்சியங்களைக் கொண்டு ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு ஈழத்தமிழினத்திற்கு நீதி கிடைக்கக்;; கோரி அனைத்து மட்டத்திலான பெண்கள் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவுக்கு அதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரி அறிக்கைகளை அனுப்பும்படி உருக்கமான வேண்டுகோள் விடுகின்றோம்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு எம்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் இணைவோம்.

கனடாத் தமிழ் மகளிர் அமைப்பு
தொடர்புகளுக்கு: CTWO87@gmail.com

0 Responses to அவசர வேண்டுகோள் - கனடாத் தமிழ் மகளிர் அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com