கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
அந்த மீனவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்.
நேற்று மாலை, தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கடுமையாகத் தாக்கினர். மேலும், சுமார் 50 படகுகளை சேதப்படுத்தினர்.
அத்துடன், தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றனர். பல மீனவர்களின் செல்போன்களையும் அவர்கள் பறித்துச் சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இலங்கை கடற்படையினரின் இத்தாக்குதலால் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

0 Responses to தமிழக மீனவர்களிடம் மீன்களையும் செல்போன்களையும் பறித்த இலங்கை கடற்படை