Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத்தீவு முழுவதும் சிங்கள மொழியிலேயே சிறிலங்கா தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இம்முடிவுக்கு அமைவாக அரச நிறுவனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் தமிழ் மொழியில் அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி பேசுபவர்களே வசித்துவருகின்றபோதும் இனிமேல் தமிழ்மொழியில் தமது நாட்டு தேசியகீதத்தை இசைக்கமுடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஒக்ஸ்போட் உரையை மேற்கொள்ளமுடியாமல் நாடுதிரும்பிய மகிந்த ராஜபக்ச, உடனடியாகவே இம்முடிவை மேற்கொள்ளமுடிவெடுத்ததாகவும் அறியவருகின்றது.

ஒருநாட்டில் இரண்டு மொழிகளில் தேசியகீதங்களை இசைக்கமுடியாது எனவும் அனைவரும் சிறிலங்கா என்ற ஒரு நாடு என்ற சிந்தனையை வளர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச இம்முடிவு சம்பந்தமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தமது ஆட்சிக்காலத்தின் போது வடக்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தமிழில் தேசியக்கீதம் பாடப்பட்ட போது வெளிநடப்பு செய்ததையும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் கூட ஒருமொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்படுவதாக மகிந்த ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்ட போது இலங்கையின் அமைச்சரவையில் உள்ள டக்ளஸ் தேவானாந்தா, ஆறுமுகன் தொண்டமான், ரவூப் ஹக்கீம், .எல்.எம் அத்தாவுல்லா ஆகியோர் எதுவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் பின்னர் பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, கனடாவில் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடமுடியும் என்ற நடைமுறை உள்ளதை சுட்டிக்காட்டியதாகவும் எனவே இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

0 Responses to தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே பாடவேண்டும் - மகிந்த அரசின் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com