Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

செந்தமிழர் சீமானே கயமை கண்டு
சிலிர்த்தெழுந்த வரிப்புலியே நாளும் நாளும்
நொந்தழியும் தமிழினத்தின் கூன் நிமிர்த்திக்
நெஞ்சிலுரம் ஏற்றிடற்கு வந்த தீர
முந்தைநிலை இற்றைநிலை சொல்லிச் சொல்லி
மூடநிலை போக்குகின்ற இளைய வீர
கந்தகத்தின் சொற்கொண்டு கயமை சாடும்
கனித்தமிழர் நாவலனே வருக! வாழ்க!!

கண்பறிக்கும் மின்னல்போற் பேச்செ ழுந்து
கருத்திழுக்கும் கருமேகக் கூட்டம் கொட்டும்
விண்ணிடியின் அதிர்வைப்போல் உணர்வு நெஞ்சில்
வீச்செடுக்கும் வித்தகனே வலைகள் வீசி
தண்ணீரில் மீன்பிடிக்கும் தன்மை போல
தமிழர்தம் நெஞ்சையெலாம் பறித்தாய் நீயோ
எண்ணியது முடிக்கின்ற பார்த்தன் அம்பு
எழுந்திட்டாய் திருக்குமரா வருக! வாழ்க!!

நாவசைவில் நாடசையும் ஓர்நாள் நல்லோய்
நற்றமிழர் தனிநாடு காண்பர் அப்போ
ப+வெடுத்துச் சரந்தொடுத்துத் தோளிற் ச+டி
புகழ்மகனே வாழிஎனும் மொழியே கேட்கும்
ஆவிநிகர் தமிழ்காத்து இனத்தைக் காத்து
ஐயநீஇ வாழ்ந்திடுக நின்னை விட்டால்
நாவெடுத்துச் சொல்லிடற்கு யாரோ உள்ளார்?
நந்தமிழர் திருவிளக்கே வருக! வாழ்க!!

வாடுகின்ற பயிருக்கு வற்றா ஆறாய்
வாவிமலர் தாமரைக்குக் கதிராய்க் கானில்
ஆடுகின்ற மஞ்ஞைக்கு முகிலாய் ஆழி
அகப்பட்ட அப்பருக்கு கல்லாய் வாழ்ந்த
வீடுறவு வீதிநிலம் காலம் காலம்
விளைந்தவயல் கனவாக யாவும் போக
கூடுடைந்த பறவைகளாய்ச் சிதைந்த ஈழத்
தமிழ்க் குலத்தார் திசைவிளக்கே வருக!வாழ்க!!

சிறைக்கூடம் சிறுத்தைக்கு யாது செய்யும்?
சிந்திக்க மறுக்கின்றார் ஆட்சி யாளர்
நிறையாழி நீர்கூடத் துணிந்த வீரர்க(;கு)
இடுப்பளவாம் என்னுமொழி அறிந்தா ரில்லை
மறைக்குறளுக் கோவியத்தை வரைந்த அந்த
முதல்வர்க்கு முதுகெலும்போ பிறப்பில் இல்லை
நறைபழுத்த தீந்தமிழில் வாழ்த்துகின்றோம்
" நாம்தமிழர்" திருமகனே வருக! வாழ்க!!

கவிதை

0 Responses to செந்தமிழன் சீமானே! சிலிர்த்தெழுந்த வரிப்புலியே வருக!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com