எம் தேசத்தின் குரலே
பாசங்கள் தனை மறந்து
பரலோகம் சென்றாயோ!
தேசியத் தலைவனின்
பாசமிகு அண்ணனே!
ஈழத்தமிழர்களை
ஏன் தவிக்க விட்டீர்
மூன்று தசாப்தமாய்
உலக நாடுகள்
அனைத்துடனும்
நேசமுடன் கை குலக்கினீர்
புத்தத்தின் கொடுமையில்
துவண்ட ஈழத் தமிழனின்
இழி நிலையை
ஏற்றமுடன் எடுத்துரைத்தீர்.
தமிழ் என்று ஓர்
இனம் உண்டாம்.
அந்த இனம்
தனிநாடு கேட்டுப்
போராடுதாம்
உலக நாடுகளின்
செவியில்
ஓதி ஓதி வைத்தாய்.
பேச்சுவார்த்தை மேசைகளில்
அத்தனை அத்தனை
கொடுமைகளையும்
ஆதாரத்துடன் எடுத்துரைக்கும்
உன் வரவு கண்டு
சிங்களம் நடுங்கும்.
ஏடுகளும் புதிது புதிதாய்
வடிவெடுக்க
ஒப்பந்தங்களும் அங்கே
ஒத்திகை பார்க்க
தேசமெல்லாம் எம்மோடு
கூடி நின்ற பார்த்திருக்கும்
நேரத்தில்
கொடிய நோயொன்று
உன்னைக் காவு கொண்டதுவோ!
தலைவன் காத்திருக்க
தமிழ் பாத்திருக்க
அண்ணா நீயும் பிரிந்தாயோ!
களத்திலே வீரர்
புலத்திலே நாம்
இல்லத்திலே துணைவி
அண்ணா நீயும்
ஏன்தான்
எம்மைத் தவிக்கவிட்டு
மறைந்தாயோ!
ஆக்கம்: ரத்தினா
0 Responses to தேசத்தின் குரலே!