Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இராணுவத்தை விட்டு ஓடியவர்களை தேடி வரும் நடவடிக்கைகளை தாங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். இராணுவத்திலிருந்த சுமார் 50,000 பேர் பணியிலிருந்து முன் அனுமதியில்லாமல் சென்றுள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.

அரசால் அடிக்கடி வழங்கப்பட்டு வரும் பொதுமன்னிப்புகளின் போது கூட அவர்கள் திரும்பி வரவில்லை என்றும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

இதில் சிலர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்திலிருந்து ஓடிப் போனவர்கள்.

இராணுவத்திலிருந்து ஓடிப் போனவர்களில் மூன்று அல்லது நான்கு பேர், அண்மையில் இரண்டு காவல்துறையினரை சுட்டுக் கொன்ற கூட்டத்தில் இருந்துள்ளனர் என்றும் மேஜர் ஜெனரல் மெதவெல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

காவலரை சுட்டுக் கொன்ற நபர்கள் கொல்லப்பட்டு விட்டாலும் அவர்கள் எப்படியான சூழலில் கொல்லப்பட்டனர் என்பது இன்னமும் தெளிவில்லாமல் உள்ளது.

இருந்தும் இராணுவத்தை விட்டு ஓடிப் போனவர்களுக்கும் குற்றங்களுக்கும் இடையேயான தொடர்புகள் இருப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் குறித்து எழுந்த கருத்துக்களை அவர் புறந்தள்ளியுள்ளார்.

ஆனால் அப்படியான பல சம்பவங்கள் அண்மையில் இடம் பெற்றுள்ளன. இராணுவத்தை விட்டு ஓடிப் போன ஒருவர், போதைப் பொருட்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கையெறி குண்டை காவல்நிலையத்தில் வெடிக்கச் செய்து, தன்னைத்தானே கொலை செய்து கொண்டுள்ளார்.

பணியிலிருந்து ஓடிப் போன இராணுவ வீரர்கள் கண்டுபிடிக்கப்படும் போது போது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவம் கூறுகிறது.

0 Responses to படையில் இருந்து ஒடியவர்களை பிடிக்க நடவடிக்கை: மேஜர் ஜெனரல் உபய மெதவல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com