தமிழக மீனவர் ஜெயக்குமார் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 500 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கடந்த 10 நாட்களுக்குக்குள் 2 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழின விரோத நடவடிக்கைகளில் இலங்கை அரசுக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இலங்கைத் தூதரத்தை முற்றகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இன்று (25.01.2011) முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி அருகிலிருந்து இலங்கைத் தூதரகம் நோக்கி பேரணியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்றனர். பேரணியில் ராஜபக்சே கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
“தடுத்து நிறுத்து தடுத்து நிறுத்து மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்து”
அப்புறப்படுத்து அப்புறப்படுத்து இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்து”
ஆகிய முழக்கங்களை எழுப்பியப்படி சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை, இலங்கை தூதரகம் அருகில் தடுத்து நிறுத்தி பொலிஸார் கைது செய்தனர். மீண்டும் இதே கோஷங்களுடன் வந்த விடுதலைச் சிறுத்தை கட்சியினரையும் பொலிஸார் கைது செய்தனர்.
ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு
திருச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இரு:நது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாண்டியன் என்ற மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றனர்.
இதையடுத்து கடந்த 22ஆம் தேதி இரவு நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரும் சென்றிருந்தார். அவரும் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சி சட்ட கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மறுமலர்ச்சி மாணவர் அமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசை கண்டித்து முழக்கங்கள் முழக்கப்பட்டன. உருவபொம்மை எரிக்கப்பட்டது.

0 Responses to ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு – விடுதலைச் சிறுத்தைகள் 500 போ் கைது