நேற்று முந் தினம் சென்னை எழும்பூரில் உள்ள மாகா போதி சங்கத்தில் இலங்கையில் இருந்து புதிதாக வந்து தங்கியிருந்த சிங்கள பொளத்த பிக்குகள் மீது உருட்டுக்கட்டை தாக்குதல் இடம்பெற்றது. வெளியே நின்ற வாகனம் தொடக்கம் விடுதியில் உள்ள சில பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டது. இத் தாக்குதலை அடுத்து சென்னை கிரிகெட் விளையாட்டுக்கு ஜெயசூரியாவும் கலந்துகொள்ளாமல் டிமிக்கிகொடுத்தார். இது இவ்வாறு இருக்க நேற்றைய தினம் இலங்கைத் தூதர் நேரடியாக தமிழ் நாடு தலைமைச் செயலகம் சென்று, செயலரைக் கண்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாராம்.
தமிழ் நாடு தலைமைச் செயலாளர் நலம்-தானா, நலம்-தானா உடலும் உள்ளமும் நலம் தான என விசாரிக்க இருவரும் பேசிய பின்னர், இலங்கைத் தூதுவர் பத்திரிகையாளருக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் இலங்கை மீனவர்கள் சுடப்பட மாட்டார்கள் எனவும், தச்சுத் தவறி இலங்கைக் கடற்பரப்பில் வந்தால் கூட நாங்கள் சுடமாட்டோம் என்றும் கூறியிருக்கிறார். இந்திய கடற்பரப்பில் வைத்தே இலங்கை இராணுவம் பல கொலைகளைப் புரிந்துள்ள நிலையில், தூதுவர் இலங்கை கடற்பரப்பினுள் நீங்கள் வந்தாலும் நாங்கள் சுடமாட்டோம் எனக் கூறியுள்ளது, ஒரு கேலிக் கூத்தாக அமைந்துள்ளது. தமிழர்களின் காதுகளில் பூ சுத்தி, கலைஞரை பிடித்து தனது பாதுகாப்பையும், மகாசங்கத்தின் பாதுகாப்பையும் அதிகரித்துள்ளார் இலங்கைத் தூதுவர்.
வழமை போல இங்கும் தில்லானா மோகனாம்பாள் படம் 70 மில்லி மீட்டரில் பயாஸ்கோப்பு போட்டு காட்டப்படுகிறது.
அதிர்வு

0 Responses to சென்னையில் பிக்கு மீது உருட்டுக்கட்டை தாக்குதல் (காணொளி இணைப்பு)