Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயகத்தில் நிலவும் ஐனநாயகத்திற்கு எதிரான இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக .தே..மு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்த்துக் கொள்ளுகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையான இரு தேசங்கள் ஒரு நாடு என்ற நிலைப்பாட்டில் உறுதியாயுள்ளவர்களை இனங்கண்டு எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை எமது கட்சி தயார்ப்படுத்தியிருந்தது.

எனினும் தமிழர் தாயகப் பகுதியில் அண்மைக் காலங்களாக மீண்டும் அதிகரித்துள்ள கொலைகள் மற்றும் கடத்தல்கள் காரணமாக மக்கள் மத்தியில் மரணபயம் அதிகரித்துள்ளது. இதற்கும் மேலாக தாயகப் பிரதேசம் எங்கும் இராணுவம் நேரடியாக தலையிட்டு வர்த்தகப் பிரமுகர்களையும், சமூகத் தலைவர்களையும் அச்சுறுத்தி ஆளும் கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிடுமாறு நிற்பந்தித்துள்ளது.

மேலும் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவ சோதனைக் கெடுபிடிகளும், இராணுவ வீதிரோந்து நடவடிக்கைகள், இராணுவ மோட்டார் சைக்கிள் அணியினரின் பொது மக்களை கிலிகொள்ள வைக்கும் வகையிலான ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எத்தகைய இராணுவக் கெடுபிடிகள் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டதோ அதேயளவு கெடுபிடிகள் தற்போதும் மேற்கொள்ளப்படுகின்றது. சகல சிவில் நிர்வாக விடயங்களிலும் இராணுவத் தலையீடு தலைவிரித்தாடுகின்றது. ஐனநாயகம் முழுமையாக மறுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இத்தேர்தல் அர்த்தமற்ற ஒன்றாக காணப்படுகின்றது.

இராணுவத்தினரை பயன்படுத்தி அரசு மேற்கொண்டுவரும் இந்த ஐனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கியிருப்பதென .தே..மு தீர்மானிக்கின்றது.

இத் தேர்திலில் போட்டியிடுவதனைத் .தே..மு தவிர்த்துக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தாயகத்து மக்களையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு சர்வதேச சமூகத்தின் உதவியுடன் இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற கொள்கை அடிப்படையில் அரசியல் தீர்வை அடைந்து கொள்ளுவதற்கான பயணத்தில் உறுதியுடன் ஈடுபடும்.

நன்றி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

0 Responses to இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு, உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவில்லை: த.தே.ம.மு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com