தமிழரசுக் கட்சியின் சார்பில் காரைநகர் பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளரான வி.ஆனைமுகன், தான் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனால் கடுமையாக மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடக்கூடாது என விஜயகலா மகேஸ்வரன் தன்னை மிரட்டியதாக அவர் கூறினார். எனினும் தான் அவரை மிரட்டவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சுவரொட்டியின் மேல் ஒட்டப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் ஆதரவுச் சுவர் ஒட்டிகளையே ஆனைமுகனை அழைத்து வந்து அகற்ற வைத்ததாக விஜயகலா மகேஸ்வரன் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் ஆனைமுகன் மேலும் கூறுகையில்,
நேற்று மாலை 4 மணியளவில் எனது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட விஜயகலா மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசியதுடன் தமிழரசுக் கட்சியின் சார்பில் காரைநகரில் எவரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என மிரட்டினார்.
பின்னர் மாலை 6 மணியளவில் நான் நின்ற இடத்துக்கு வந்த அவர் என்னை கடுமையாக எச்சரித்ததுடன் மகேஸ்வரனின் சுவரொட்டி மேல் ஒட்டப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் ஆதரவு சுவரொட்டிகள் என்னைக் கொண்டு அகற்றினார். இது மகேஸ்வரனின் கோட்டை எனவும் கடும்தொனியில் கூறினார் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய கலா மகேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
நான் அவரை மிரட்டவில்லை. மகேஸ்வரனின் சுவரொட்டிகளின் மேல் ஒட்டப்பட்டிருந்த தமிழரசுக் கட்சி ஆதரவு சுவரொட்டிகளையே அவரை அழைத்து வந்து அகற்றச் செய்தேன். அவரை எச்சரிக்கும் வகையில் நான் எதுவும் கூறவில்லை. அதில் உண்மையில்லை. என்றார்.

0 Responses to விஜயகலா தன்னை மிரட்டியதாக வி.ஆனைமுகன் முறைப்பாடு