மகிந்த ராஜபக்ஷ திடீரென அமெரிக்க பயணமாகியுள்ளார். அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரிச்சாட் ஆமிடேஜ் உடன் கொழும்பில்வைத்து பேச்சுவார்த்தை ஒன்றை நடத்திவிட்டே அவர் அமெரிக்க பயணமாகியுள்ளார். அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்காத நிலையில், தனது தனிப்பட்ட விஜயமாகவே அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதம மந்திரி, ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு என பல அமைப்புகள் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் மகிந்தவின் வரவை ஒட்டி பிரித்தானியாவில் நடைபெற்றது போன்றதொரு ஆர்ப்பாட்டத்தைச் செய்து, போர் குற்றவாளியான மகிந்தவை அங்கிருந்து விரட்டவேண்டும்.
பிரித்தானியாவைப் போல அதிக தமிழர்கள் அமெரிக்காவில் வாழாவிட்டாலும், குறைந்தபட்ச தமிழர்களாவது, தமது எதிர்ப்பைக் காட்டியே ஆகவேண்டும். தற்போது சீன ஜனாதிபதி அரசுமுறைப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளபோதும், அங்குள்ள திபெத்தியர்கள் வெள்ளைமாளிகைக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 100 திபெத்தியர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை, உலகத் தெலைக்காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பியுள்ளது. எனவே குறைந்த பட்சம் சிறு தொகையிலாவது அமெரிக்க தமிழர்கள் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டும். இது குறித்து அமெரிக்க நாடு கடந்த தமிழீழ அரசு நல்லதொரு முடிவை எடுக்கும் என உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இச் செய்தி அதிர்விலிருந்து...

0 Responses to மகிந்த அமெரிக்காவில்: அமெரிக்க நாடு கடந்த தமிழீழ அரசு என்ன செய்யப்போகிறது?