Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின்தமிழர் தேசிய திருவிழாசனவரி 17-ஆம் தேதி இனிதே கொண்டாடப்பட்டது. ஊரெங்கும் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டு, தானி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக காலை 9 மணி முதலே சிறுவர்களும், சிறுமியர்களும், பெண்களும் T.E.L.C மைதானம் நோக்கி வரத்தொடங்கிவிடார்கள்.

ஓட்டபந்தயம், கயிறு இழுத்தல், எலுமிச்சை கரண்டி, பானை உடைத்தல், இசை நாற்காலி மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றன. அனைத்து போட்டிகளையும் இரு உடல் பயிற்சி ஆசிரியர்கள் நடத்த, விழா கமிட்டியை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் அவற்றை சிறப்பாக ஒருங்கினைத்தார்கள். வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக குருதி பரிசோதனை செய்து அவர்களின் குருதி பிரிவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. குருதிகொடைக்கு விருப்பமுள்ளவர்களின் பெயர் பெறப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

5 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் திருவள்ளூர்-இல் உள்ள MGR சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மைதானம் வந்தடைந்தார். இவருடன் தலைமை செயலர் திரு.தடா ராசா மற்றும் குடும்பத்தினர், இயக்குனர் செல்வபாரதி, சென்னை தெற்கு ஒருங்கிணைப்பாளர் திரு.தங்கராசு

வேளச்சேரி பகுதி ஒருங்கிணைப்பாளர் தமிழ் தேவன் மற்றும் பலர் வந்து சேர்ந்தனர். இவர்களை திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகிரி, அதிகத்தூர் தலைவர் சிதம்பரநாதன், ஆகாச குமார், மகேந்திரன், ரமேஷ், லோகநாதன், லிங்கேஸ்வரன், பசுபதி, ராஜ்குமார், சென்னை வடக்கு ஆனந்தராஜ், உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர். இவர்களின் முன்னிலையில் கபடி இறுதி போட்டி நடைபெற்றது.

6-மணி அளவில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. திருவள்ளூர் சிலம்பாட்ட குழுவினர் சார்பில் இரு குழுக்கள் சிறப்பாக சிலம்பம் ஆடினார்கள், அது மிக எழுச்சியாகவும், வீரம் செறிந்ததாகவும் இருந்ததை காண முடிந்தது.

பிறகு பறை குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுச்சி மிக்க பாரம்பரிய பறை முழக்கத்திநூடே அவர்கள் நிகழ்திக்காட்டிய தமிழர் வாழ்வு முறையும், அங்கே சூறாவளியாக வந்த ராஜபக்சேவும், அவர்களுக்கு உதவிய இந்தியாவும், அந்த போரும், துயரமும், மேலும்விழ விழ எழுவோம்என்ற எழுச்சி காட்சிகளும் பார்ப்போர் மனதை பாதிக்காமல் இருக்காது.

அதை தொடர்ந்துமால் கொம்புஎன்ற பழமையான தமிழ் கலை, இப்பொழுது மகாராஷ்ட்ராவில் மட்டுமே உள்ள கலை இங்கே நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. நம் தம்பிகளின் வீரமும், ஒருங்கிணைப்பும் இதன் ஊடே வெளிப்பட்டது.

கலை நிகழ்வுகள் நிறைவு பெற்றபின் திரு.தடா ராசா அவர்கள் முன்னிலையில், மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நாம் தமிழரின் உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது. பிறகு அழகிரி அவர்கள் வரவேற்புரை வழங்க, திரு.தங்கராசு, திரு.சிதம்பரநாதன், இயக்குனர் செல்வபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். சென்னை வடக்கு நாம் தமிழரை சேர்ந்த ஆனந்தராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

திரு.சீமான் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அவர் தமிழ் மொழியின் அவசியத்தை, கலப்படமில்லாமல் தமிழ் பேசவேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி பேசினார். பிறகு எப்படி சினிமா வந்து நமது பாரம்பரிய கலைகளை அழித்துகொண்டிருகிறதோ, அப்படியே கிரிக்கெட் வந்து நமது கலாச்சார வீர விளையாட்டுக்களான கபடி, சிலம்பம், மால்கொம்பு, போன்ற விளையாட்டுகளை அழித்து கொண்டிருக்கிறது. அந்த அழிவிலிருந்து போராடும் இந்த கலைஞர்களை நாம் ஆதரித்து பேணவேண்டும் என்றும் கூறினார். மேலும் அரசியல் என்பது வேறு அல்ல வீட்டு நிர்வாகம் என்பது வேறு அல்ல, வீட்டு நிர்வாகமே ஒரு உயரிய மட்டத்தில் செய்யும் பொழுது அது நாட்டு நிர்வாகம் ஆகின்றது என்றார். ஆகவே எதற்காக நாம் ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.. அப்படி ஒதுங்கி இருப்பதால் தான் கயவர்கள் உள்ளே வந்து விடுகிறார்கள் என்றார். நாட்டின் எதிர்காலமான மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழுமியிருந்த கூட்டத்தில் அவர் பேச்சு சிறந்த வரவேற்பை பெற்றது என்பதை அங்கே எழுந்துகொண்டிருந்த கரவொலி நிரூபித்தது.

சிறப்புரை முடிந்த பிறகு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ் வெற்றிபெற்றவர்கள் மற்றும் பங்கு பெற்றவர்களுக்கு திரு.சீமான் அவர்களால் வழங்கப்பட்டது.

நன்றியுரை வழங்கி திரு.ரமேஷ் அவர்கள் பேசினார். கடந்த இரண்டு நாட்களாக சோர்வின்றி உழைத்த விழா குழுவினரின் பெருமுயற்சி ஒரு சிறப்பான வெற்றியை அவர்களுக்கு ஈட்டி தந்தது.

இறுதியாக பறைகுழுவினர் எங்களுக்கு பாடவும் தெரியும் என்பதை நிரூபித்துதமிழா தமிழா ஒன்றுபடு, தமிழா தமிழால் ஒன்றுபடுஎன்ற பாடலை இசைத்து பாடினர். இதில் சீமான் மற்றும் கூட்டத்தினரும் கலந்து கொண்டது மிக எழுச்சியாக அமைந்தது.. ஒரு சிறுவன் முத்துக்குமார் பற்றிய பாடலை மழலை குரலில் பாடி நெகிழவைத்தான்.

களைந்து சென்ற மாணவர்கள்தமிழா தமிழால் ஒன்றுபடுஎன்று முனுமுனுத்துகொண்டே சென்றதை பார்த்த பொழுது இந்த நிகழ்ச்சி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை உணர முடிந்தது.

நிகழ்வுகள் அனைத்தையும் பின்புலமாக இருந்து ஒருங்கிணைத்து கடும் பணி ஆற்றிய வெற்றியரசன், மற்றும் மணிவாசன் கண்களில் நீர் துளிர்ததையும் அங்கே பார்க்க முடிந்தது. ஒரு நிறைவான, பயனுள்ள நிகழ்ச்சி, இனி இது நாம் தமிழரிடையே ஒரு எடுத்துகாட்டு நிகழ்வாகவே பார்க்கப்படும்….

திருவள்ளுரிளிருந்துசெல்வராஜ் முருகையன்.


0 Responses to திருவள்ளூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தமிழர் திருவிழா (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com