பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் ஒன்றுகூடல் ஒன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
நேற்றைய தினம் பேர்த் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட அந்நாட்டின் பிரதமர் ஜூலியா கிலாட் உலக தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுத்திடலை பார்வையிட்டார்.
ஒக்ரோபர் மாதத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில், 53 நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் வருகைதரவிருப்பதால் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை மேற்கொள்வதில் அவுஸ்திரேலியா கூடிய கவனம் எடுக்கவுள்ளது.
சிறிலங்கா அரசும் தனது வெளிநாட்டு பயணத்திற்கான சாதகமான சூழ்நிலையை இந்நிகழ்வு ஏற்படுத்தும் என கருதுகின்றது. அதனை வாய்ப்பாக கொண்டு மகிந்த ராஜபக்ச தனது பரிவாரங்களுடன் படையெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறிலங்கா அரச தலைவர்களுக்கு வெளிநாடுகளில் சந்திப்புக்களை ஏற்படுத்துவதில் இன்னமும் சாதகமற்ற நிலையே காணப்படுகின்றது. சீனா இந்தியா ஈரான் வியட்நாம் போன்ற நாடுகள் மட்டுமே மகிந்த ராஜபக்சவை வரவேற்று உபசரிக்க தயாராகவிருக்கின்றன.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தனது நிலையை தக்கவைக்க மகிந்த ராஜபக்ச முயற்சி எடுக்கலாம் எனவும் இதனை தமிழர் தரப்புக்கள் எவ்வாறு கையாளப்போகின்றன என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 Responses to அவுஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு! மகிந்த ராஜபக்ச கலந்துகொள்வாரா?