யாழ் மாவட்ட மக்கள் பலர் குடும்பங்களுடன் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கொழும்பிற்கு புறப்படத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
போர் முடிவடைந்த பின் சில மாதங்கள் அமைதியாக இருந்த ஈழ மண் மீண்டும் இரத்தக்கறை படிய ஆரம்பித்துள்ளது.
புலிகளின் ஆதரவாளர்களையும் முன்னாள் புலிகளையும் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதனால் இறுதி யுத்தம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசித்து வந்து தற்போது யாழில் தமது கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால் வசதி வாய்ப்புள்ள மக்கள் தமது குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தயாராகி வருகின்றனர்,
சில குடும்பங்கள் கடந்த வாரமே யாழை விட்டு வெளி மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். குறிப்பாக இந்தியாவுக்கு செல்வதற்காக பலர் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக விடுதலை செய்யப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கபட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களையும் இராணுவ புலனாய்வாளர்களும் ஒட்டுப்படையினரும் விசாரித்து வருவதாகவும் பலரை நேரடியாகவே எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு தயாராகியிருந்த பலர் தாமாகவே பயணத்தை ரத்துச் செய்துள்ளனர்,
ஈழத்தில் உள்ள அவர்களின் உறவினர்களும் இங்கு தற்போது நிலமை சரியில்லை எனவே இங்கு தற்போது வரவேண்டாம் என்று கூறுவதாகவும் நாம் அறிகிறோம்.

0 Responses to யாழ் மக்கள் உயிர் அச்சுறுத்தலினால் குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைமை!