Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட 10 வேங்கைகளினதும், மற்றும் ஜனவரி மாதத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களினதும் நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் மிகவும் எழுச்சிகரமாய் நடைபெற்றது.

நேற்று (16-01-2011) மாலை லண்டன் சவுத்ஹோல் பகுதியில் அமைந்துள்ள "ப்பெதர்ஸ்ரோன் கைஸ்கூல்" மண்டபத்திலேயே இந்த நினைவுவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கப்டன் பண்டிதர், மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ், மற்றும் கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட 10 வேங்கைகளினதும் நினைவுருவப் படங்களும், அனைத்து மாவீரர்களுக்கான நினைவுருவும் வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பல நூற்ருக்கணக்கான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு தம் சந்ததிக்காய் உயிர் நீத்து சரித்திரமாகிவிட்ட வீரமறவர்களுக்கு வணக்கத்தை செலுத்தினர்.

முதலில் பொதுச்சுடரேற்றல் இடம்பெற்றது. பொதுச்சுடரை லெப்.கேணல் பாமா, லெப் வெங்கடேஸ் ஆகிய மாவீரர்களின் தாயார் திருமதி. சண்முகசுந்தரம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல் இடம்பெற்றது. முதலாவது ஈகைச்சுடரை கேணல் கிட்டு அவர்களின் மருமகன் (அக்காவின் மகன்) திரு.பாஸ்கரன் அவர்கள் ஏற்றிவைக்க இரண்டாவது ஈகைச்சுடரை திரு. யசோ அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடரேற்றலைத் தொடர்ந்து இதுவரைகாலமும் போரில் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களுக்காகவும், போரினாலும், இரண்டகர்களினாலும் அனியாயமாக படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் அகவணக்கமும், அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் இடம்பெற்றது.

தொடர்ந்து நிகழ்வுகளாக கவிதைகள், நடனங்கள், நினைவுரை, சிறப்பு நினைவுரை, இசைக்குழுவினரின் எழுச்சி கானங்கள்,ஆகிய நிகழ்வுகளோடு புதிய வெளியீடாக குறும்படங்கள் நான்கை கொண்ட "மண்ணும் சிவந்தது" எனும் இறுவெட்டு வெளியீடும், தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்விற்காக நினைவுரையாற்றிய திரு, பழ.நெடுமாறன், குளத்தூர் மணி ஆகியோரின் நினைவுரை பதிவுகள் ஒலிவடிவிலும் இடம்பெற்றது.

நினைவுவணக்க நிகழ்வில் இடம்பெற்ற நிகழ்வுகளாக எம்.கே.ரிதம் இசைக்குழுவினரின் எழுச்சிகானங்கள் இசைக்கப்பட்டதோடு, செல்வி. நிருஜா ஜீவகுமாரின் உரையும், செல்வி.சிவபாரதி, திரு.சிவசுப்பிரமணியம் ஐயா அவர்களினதும் கவிதைகளும், நாடுகடந்த தமிழீழ அரசின் உதவிப்பிரதமரும், நாடுகடந்த தமிழீழ அரசின் மாவீரர், போராளிகள் குடும்ப நலன் பேணல் அமைச்சருமான திரு. ருத்திராபதி சேகர் அவர்களின் சிறப்பு நினைவுரையும் இடம்பெற்றது.

தொடர்ந்து "மண்ணும் சிவந்தது" எனும் இறுவெட்டு வெளியீடும், எழுச்சி நடனங்களாக ஆசிரியை கெளசல்யா அவர்களின் சவித்ஹோல் தமிழ்ச் சங்க மாணவிகள் வழங்கிய "ராஜகோபுரம் எங்கள் தலைவன்" எனும் பாடலுக்கான நடனமும், ஆசிரியை சுகந்தி அவர்களின் சவுத்ஹோல் தமிழ்க் கல்விக்கூட மாணவிகளினது "எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை" எனும் பாடலுக்கான எழுச்சி நடனமும், ஆசிரியை ராஜினியின் மாணவிகள் வழங்கிய "விழ விழ எழுவோம்" எனும் பாடலுக்கான நடனமும், இறுதி நிகழ்வாக கிலிங்டன் தமிழ்ப் பாடசாலை மாணவ மாணவிகள் வழங்கிய எழுச்சி நடனமும் இடம்பெற்றது. மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 10:15 மணிக்கு நிறைவுபெற்றது.

இந்த நிகழ்வில் "மண்ணும் சிவந்தது" குறும்பட இறுவெட்டின் சில காட்சிகள் அகன்ற திரையில் மக்கள் பார்வைக்கு காண்பிக்கப்பட்டதோடு, இலவச தேனீரும், மிகக்குறைந்த விலையில் சிற்றுண்டிகளும் விற்பனை செய்யப்பட்டதோடு, மண்டபத்தில் தேசியத் தலைவரின் படம் பொறிக்கப்பட்ட பொக்கற் கலண்டர், இறுவெட்டு, மாத கலண்டர் போன்றனவும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.























0 Responses to லண்டனில் எழுச்சிகரமாய் நடைபெற்ற கேணல் கிட்டு நினைவு நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com