Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று (சனிக்கிழமை) மன்னார் மாவட்டத்திற்கு கற்றுக்கொண்ட பாடத்திற்காக ஜனாதிபதியின் ஆணைக்குழு விஜயம் ஒன்றை மேற்கொண்டது. கணவனைப் பறிகொடுத்த மனைவிமாரும், பிள்ளைகளைத் தொலைத்த தாய்மாரும், காணமல் போனவர்களின் உறவினர்கள் என, பலர் சாட்சியம் அளிக்க அங்கே திரண்டு நின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக மக்கள் அவர்களிடம் குறைகளைக் கூறினர். ஏதோ இந்த ஆணைக்குழு தமக்கு நன்மை செய்யப்போகிறது என நினைத்து அவர்கள் இவர்களிடம் தமது வாக்குமூலங்களைக் கொடுத்தனர். ஆனால் .... இங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா மக்களே...

சாட்சியங்களைப் பதிவுசெய்யவேண்டியவர் நித்திரையில் தூங்கி வழிகிறார். ஏதோ பெரிதாக வேலைசெய்து வெட்டி முறித்தவர்போல, ஒரு அசமந்தமாக இவர் தூங்குவதைப் பார்த்தீர்களா? இவர்களுக்கா தெரியப்போகிறது தமிழர் படும்பாடு. ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு தமக்கு ஏதாவது செய்யும் என நம்பிவந்த மக்களை, அவர்கள் சொல்லவந்ததைக் கூடக் கேட்க சிங்களம் தயாராக இல்லை. இங்கே குறட்டை விட்டு உறங்கும் ஆணைக்குழுவின் உறுப்பினரை, மற்றைய உறுப்பினர் தட்டி எழுப்பக்கூடத் தயார் இல்லை. காரணம் தூக்கம் கெட்டுவிடும்...

தமிழர்களை ஒரு பொருட்டாகவே சிங்களம் மதிக்கவில்லை. இந் நிலையில் மேலும் மேலும் அரசை நம்பி ஏமாரும் பாமரத் தமிழர்கள் நிலை மேலும் கவலைக்கிடமாகப் போகிறது என்பது, இங்கே தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

இச் செய்தி அதிர்விலிருந்து...

0 Responses to இப்படியும் ஒரு ஆணைக்குழுவை எங்கேயாவது பார்த்தது உண்டா? (படம் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com