Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம், தாங்கள் ஒரு இறைமையுள்ள தேசிய இனம் என குறியீட்டு ரீதியாக அடையாளப்படுத்தும், தமிழீழத் தேசிய அட்டையை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கி வருகின்றது.

தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் முதல் இந்த அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் முதல்கட்டமாக தேசிய அட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றது. ஏனைய நாடுகளில் விரைவாக விரிவுபடுத்தப்பட இருக்கின்றது.

அமெரிக்காவில், தமிழீழ தேசிய அட்டை உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டுள்ள நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த தலைமை அமைச்சர் திரு.விசுவாநாதன் உருத்திரகுமாரன் அவர்கள்,

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், அடுத்த கட்டத்துக்கு போகின்றோம் எனும் ரீதியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள், 2007ம் ஆண்டு நாடு எனும் அடிப்படையில் தமிழீழ தேசிய அட்டைகளை வழங்கினார். அதன் தொடர்சியாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தேசிய அட்டைகளை வழங்குகின்றது என குறிப்பிட்டார்.

மேலும், சிறிலங்கா அரசு, தமிழீழம் ஒன்று அங்கில்லை என்ற கருத்தை வலுவாக முன்வைத்து, தமிழர்களின் அடையாங்களை சிதைத்துவரும் நிலையில், எமது அடையாளத்தை பேணுகின்ற நோக்கிலும் இந்த தேசிய அட்டை அமைகின்றதெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிறந்திருக்கும் 2011ம் ஆண்டு, உலக அரங்கில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு மிகுந்த வாய்ப்புக்கள் நிறைந்த ஆண்டாக உள்ளதெனவும், ராஜதந்திர மட்டங்களில் இலங்கை தொடர்பான கொள்கை நிலைப்பாடுகளில் மீளாய்வுகள் இடம்பெற்று வருகின்றமை இதில் குறிப்பிடதக்க ஒன்றாக கருதலாம் எனவும் அவர் தெரிவித்தார்.





0 Responses to தமிழீழ தேசிய அட்டை தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வருகிறது (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com