Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்சமயம் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஷவை கைதுசெய்து விசாரிக்கவேணும் என தமிழர்கள் கோரியுள்ளனர்.

போர் குற்றவாளியான மகிந்தரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக்கூடாது எனவும், அமெரிக்காவில் உள்ள மகிந்தரைக் கைதுசெய்யவேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக இன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

குறிப்பாக இளையோர்களும், மாணவர்களும் இப் போராட்டத்தில் ஈடுபட்டததைக் காணக்கூடியதாக இருந்தது.

கடும் குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாது, நூற்றுக்கணக்காண மக்கள் கலந்துகொண்ட இப் போராட்டமானது, மகிந்தருக்கு மேலும் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தூதுவராலயம் அனைத்தையும் அவதானித்துள்ளதோடு, தமது தலைமைச் செயலகத்துக்கு இப் பொராட்டம் தொடர்பான தகவல்களையும் அனுப்பி வைத்துள்ளது.

மகிந்த அமெரிக்காவில் சுமார் 10 நாட்கள் தங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் திங்கள் வெள்ளை மாளிகை முன்னால் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இப் போராட்டங்ககள் வலுப்பெற்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.







0 Responses to அமெரிக்க தூதரகம் முன்பாக தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com