Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசாங்கமானது இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுடன் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டால் அதன் மீது கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாக அமெரிக்கா எச்சரித்திருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தினை மேற்கோள்காட்டி நோர்வேயின் ஆப்டன் போஸ்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

மேற்படி கொள்வனவானது .நாவின் 1718 ஆம் இலக்க தீர்மானத்திற்கு முரணானதென அமெரிக்கா சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது 2009 மே 8ம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இந்தத் தகவல் பரிமாறப்பட்டுள்ளது.

அண்மைய புலனாய்வு அறிக்கைகளின் மூலம் வடகொரியாவில் இருந்து சிறிலங்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆர்.பி.ஜி-7 உந்துகணைகள் மற்றும் பல்குழல் பீரங்கிகளை வாங்க முனைவதாக தெரியவந்துள்ளது.

இத்தகைய கொள்வனவு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின் இலங்கையுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் தாம் நிறுத்திக்கொள்வதாக அமெரிக்கா எச்சரித்திருந்ததாகவும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இலங்கை அரசு இக்குற்றச்சாட்டினை நிராகரித்திருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை மீதான அமெரிக்காவின் எச்சரிக்கை: விக்கிலீக்ஸ் வெளியிடும் தகவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com