சண் சீ கப்பலின் மூலம் கனடாவுக்கு சென்ற ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை நிராகரித்துள்ளது. இந்தநிலையில் அவர், கனடாவுக்குள் அகதியாக ஏற்றுக்கொள்ளப்படலாம் என்றும் அந்த சபை பரிந்துரைத்துள்ளது.
பிரஸ்தாப இலங்கைத் தமிழர், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார் என கனேடிய அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
எனினும் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை உறுப்பினர் மார்க் டெஸ்லர், இது தொடர்பில் கருத்துரைக்கையில், குறித்த தமிழ் அகதி தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பை கொண்டவர் என்பதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என தெரிவித்துள்ளார்
தமிழீழ விடுதலைப்புலிகளின் வாகன திருத்துமிடத்தில் குறித்த அகதி பணிபுரிந்துள்ளார். எனினும் அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல என மார்க் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அகதியை போன்று சண் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்த மேலும் 30 பேர் வரை கனடாவினால் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அடிப்படையில் அகதிகளாக அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன

0 Responses to சண் சீ கப்பலில் சென்ற அகதி, விடுதலைப்புலி உறுப்பினர் அல்ல: கனேடிய அகதிகள் சபை