இதுவரை சிறீலங்காவில் என்றுமே பிடிபடாத வெள்ளைவான் இன்று பிடிபட்டது. செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் இது பிடிபடக்கூடிய ( போலி ) வெள்ளை வானாகவே தெரிகிறது. உதயனின் செய்தி இப்படியுள்ளது.
யாழ்ப்பாணம் மீசாலை கிழக்குப் பகுதியில் நேற்று வெள்ளை வானொன்றில் கடத்திச் செல்லப்பட்ட பெண் சாவகச்சேரி பெருங்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீசாலை கிழக்கில் கணவரைவிட்டு பிரிந்து, உறவினர்களுடன் வாழ்ந்து வந்த குகதாஸ் சாந்தினி என்பவரே இவ்வாறு கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளவராவார். இவரது கடத்தலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் கணவரான குகதாஸ் நேற்று சாவகச்சேரியில் வைத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வானுடன் காவற்றுறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தார்
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
கனடாவில் இருந்து கடந்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு வந்த கொலை செய்யப்பட்டவரின் கணவர் கொழும்பில் வெள்ளை நிற வான் ஒன்றை சாரதியுடன் வாடகைக்கு அமர்த்தியுள்ளார், பின்னர் வவுனியாவில் வேறு இருவரையும் அழைத்துக் கொண்டு மீசாலையிலுள்ள வீட்டுக்கு நேற்று வந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்தவர்களை தடிகள் பொல்லுகள்ளால் தாக்கியுமுள்ளனர். அங்கிருந்தவர்கள் கூக்குரலிடவே வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுபவர்கள் பிஸ்டலை பெண்ணின் மகனுடைய தலையில் வைத்து மிரட்டியதோடு அந்தப் பெண்ணையும், 8 வயதுடைய அவருடைய மகனையும் ஆயுத முனையில் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் என்று அயலவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தையறிந்து உடனடியாக படையினரின் உதவியுடன் செயலில் இறங்கிய காவற்றுறையினர் சாவகச்சேரி புறநகர்ப் பகுதியில் சம்பந்தப்பட்ட வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். பிடிக்கப்பட்ட வேளை வானினுள் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் மீட்கப்பட்ட போதிலும், கடத்தப்பட்ட பெண் வானினுள் இருக்கவில்லை. அவ் வேளையில் வானில் இருந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரும், வாகனச் சாரதியும், வேறொரு பெண்ணும் காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
காவற்றுறை வாகனத்தை மடக்கிப் பிடித்த வேளை, வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் ஆயுததாரிகளும் தலைமறைவாகி இருந்தனர். இவர்கள் இருவரையும் தேடி நேற்று மாலை முழுவதும் காவற்றுறையினர் வலை விரித்திருந்தனர். அதே நேரம் காணாமற்போன சாந்தினியைத் தேடும் பணியையும் முடுக்கி விட்டிருந்தனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது சாந்தினியை ஒரு அடர்ந்த மரம் நிறைந்த பகுதியில் வானில் இருந்து கணவர் தள்ளி விட்டதாக மகன் கூறியதாகத் தெரியவந்திருந்தது.
இன்று காலை பெருங்குளம் பகுதியில் பெண் ஒருவருடைய சடலம் காணப்படுவதாகக் தகவல்கள் வெளியாகியிருந்ததைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவற்றுறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 Responses to மீசாலை கிழக்கில் "போலி" வெள்ளை வானில் பெண் கொலை