Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில் ஆண்டு தோறும் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்டு வரும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு விளையாட்டுப்போட்டிகளின் 2011ம் ஆண்டின் போட்டிகள் விளையாட்டுத்துறையின் பொறுப்பாளர் திரு. சுதர்சன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.

முதல் நாளாகிய 06.03.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பொண்டி என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறப்பி மண்டபத்தில் வீரவேங்கை கப்ரன். மணிமகனின் சகோதரி பொதுச்சுடரினை ஏற்றிவைக்க தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு முதல் நாள் போட்டியில் சதுரங்கமும், கரம்போட்டிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சிறியவர் முதற்கொண்டு பெரியவர்கள் வரை இப்போட்டிகளில் பங்கு கொண்டு சிறப்பித்திருந்தனர். பி.பகல் மணிவரை போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்ற இவ்வாண்டு அதிகளவில் போட்டியாளர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து ஏனைய போட்டிகள் கால அட்டவணைப்படி நடைபெறவுள்ளன என்பதும் அதனுடைய விபரங்கள் யாவும் பத்திரிகை, இணையத்தளங்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நாளாந்த தொலைபேசி செய்தியிலும் கேட்கலாம் என்றும் நடத்துனர்களால் தெரிவிக்கப்பட்து.

0 Responses to தேசிய மாவீரர் நினைவு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்: பிரான்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com