Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் புதிய மாற்றம் துவங்கி இருக்கிறது என்று, நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிமைப்பாளரான திரைப்பட இயக்குநர் சீமான் பேசினார்.

÷கோவை, ராஜவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் {திங்கள்கிழமை அவர் பேசியது:

÷தமிழகத்தில் புதிய மாற்றம் தொடங்கி இருக்கிறது. சாதிக்காக, மதத்துக்காகக் கூடிய தமிழர்கள் இன்று தமிழ் என்ற பொது இனத்துக்காக கூடத் தொடங்கி இருக்கின்றனர். இது காலம் கடந்து நடப்பது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த உணர்வு ஏற்பட்டிருந்தால் இலங்கையில் தமிழீழம் மலர்ந்திருக்கும். அங்குள்ள லட்சக் கணக்கான தமிழர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

÷இது உணர்ந்து, செய்வதறியாமல் நிர்க்கதியாக நிற்கும் தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காகவேநாம் தமிழர்கட்சி உள்ளது. மாற்றத்துக்கு நாம் தயாராக வேண்டும். எகிப்தும் லிபியாவும் நமக்கு உணர்த்துவது இதைத் தான்.

÷ஈழத்தில் தமிழர்களின் அழிவுக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தமிழர்கள் தோற்கடிக்க வேண்டும். கற்ற தமிழை விற்றுப் பிழைக்கின்ற வியாபாரிகள், சுயமரியாதை, தன்மானம் குறித்து பேசக் கூடாது. அதற்கு அவர்களுக்குத் தகுதியில்லை என்றார்.

÷இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பெரியார் திராவிடர் கழகச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் ஆகியோரும் பேசினர். இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர்கள் ஜி.ஆர்.ஞானசம்பந்தன், டி.சி.செந்தில்குமார், மாவட்டத் தலைவர் வி.வி.மாணிக்கம், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை கார்வண்ணன், மக்கள் ஜனநாயகக் கட்சி அஸ்லாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 Responses to தமிழகத்தில் புதிய மாற்றம்: செந்தமிழன் சீமான் - தினமணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com