Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இயங்கி வருவதாக, இலங்கை பிரதமர் டி.எம் ஜெயரட்ன கூறி இருந்த கூற்றுத் தொடர்பில், இந்தியா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு அமைச்சுடன் முரண்பட்டுள்ளதாக, வெளிநாட்டு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சர்ச்சைக்குரிய கூற்றை பிரதமர் வெளியிட்டுள்ளமையால், இலங்கை இந்திய உறவு பாதிப்படையும் எனவும், விரைவில் அதன் பிரதிபலனை சந்திக்க நேரும் எனவும் உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை இந்திய மீனவர்கள் விடயம் ஓரளவுக்கு தீர்க்கப்பட்ட சில தினங்களிலேயே இவ்வாறு மீண்டும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறித்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to தமிழகத்தில் புலிகள் - இந்திய அதிகாரிகள் இலங்கை அமைச்சுடன் முரண்பாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com