Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில் தமிழ்மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் ஒன்றான திறான்சியில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் 9 வது ஆண்டு விழா 05.03.2011 சனிக்கிழமை பி.பகல் 14.30 மணிக்கு ஆரம்பமாகியது.

பொதுச்சுடரினையும், ஈகத்தாய் பார்வதியம்மாவுக்கும் மாவீரன் மணிமாலனின் பெற்றோர்கள் நினைவுச்சுடரினையும் ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

ஆசிரியர்கள் மங்கள விளக்கு ஏற்றலுடன் தமிழ்ச்சோலைக்குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் வரவேற்பு நடனம், வரவேற்புரை கவிதைகள் பேச்சுக்கள், பாடல்கள், பிரெஞ்சு, ஆங்கிலப்பாடல்கள், விடுதலை நடனங்கள், மயில் பாம்பு நடனங்கள், நாடகங்கள், குழு நடனங்கள், பட்டிமன்றம் போன்றனவும் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில் சிறப்புடன் கலந்து கொண்ட மாநகர முதல்வரின் துணைவியார், மற்றும் உதவி முதல்வர், கட்சிப்பிரமுகர்கள், பிரெஞ்சு முக்கியஸ்தர்கள், தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டதுடன் உரைகளையும் ஆற்றியிருந்தனர்.

200 வரையிலான தமிழ்க்குழந்தைகள் நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். தமிழ் மொழித் தேர்விலும், ஏனைய போட்டிகளிலும் வெற்றியீட்டிய மாணவி, மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், மாணவர்களால் மதிப்பளிக்கப்பட்டனர். 10.00 மணிவரை நிகழ்வுகள் நடைபெற்றன.

0 Responses to பிரான்சில் தமிழ்ச்சங்கம் திறான்சியின் தமிழ்ச்சோலை ஆண்டுவிழா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com