Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச விவகாரங்களுக்கான நெதர்லாந்து சமூகம் ( Netherlands Society for International Affairs ) என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை பற்றியதான மாநாடொன்று மார்ச் 10 வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நெதர்லாந்தின் பிரசித்தி பெற்ற குறோனின்கன் றோயல் ( Royal University of Groningen) பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற இந்த மாநாட்டுக்கு கலந்து கொள்ள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்து உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசின் இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விசாரணைகளுக்கான அமைச்சகத்தின் சார்பில் மக்கள் பிரதிநிதி கலாநிதி கரன் முருகவேல் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருப்பதோடு நாடு பிரதமர் திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும் இணையழி காணொளியூடாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அரைநூற்றாண்டுக்கு மேலாக ஈழத்தமிழனத்தின் மீது சிங்கள பேரினவாத அரசுகளினால் திட்மிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனச்சுத்திகரிப்புக் குறித்து கலந்துரையடப்பட்டது.
குறிப்பாக 2009ம் ஆண்டு சர்வதேச நியமங்களுக்கு மாறாக தமிழனத்தின் மீது சிறிலங்கா அரசினால் நடாத்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான யுத்தம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

1945ல் இரண்டாம் உலகப்போர் முடியும் தறுவாயில் நிறுவப்பட்ட இந்த நிறுவனமானது முக்கியமான சர்வதேச விவகாரங்களை பற்றிய அறிவையும், தகவல்களையும் பல்வேறுபட்ட கட்சிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வழங்குகின்ற முக்கிய பணியை ஆற்றிவருகின்றது.

இந்த அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞரின் உரை அடுத்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச மதிப்பினைப் பெற்ற இந்த அமைப்பு பினால் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு விடுக்கப்பட்ட அழைப்பான தமிழர்களுக்களுடைய சனாநாயக போராட்டத்துக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் மட்டுமன்றி, தமிழர் மீதான இனப்படுகொலைக்கு எதிரான பரப்புரை இயக்கத்துக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாக இதனைக் கருதலாம்.

0 Responses to நெதர்லாந்து சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழினப்படுகொலை பற்றிய மாநாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com