உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களை நடாத்துவதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம் நிலைபெற்றிருப்பதாக சர்வதேசத்துக்குக் காட்ட அரசாங்கம் முயற்சிப்பதாக விக்கிரமபாகு கருணாரத்தின குற்றம் சாட்டியுள்ளார்.
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தோ்தல்கள் மூலம் இலங்கையில் ஜனநாயகம் நிலைபெற்றிருப்பதாக சர்வதேசத்தை ஏமாற்றிவிட்டு, மறுபுறத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி தோ்தல் ஆணையாளரையும் மிரட்டி வாக்குகளைக் கொள்ளையடிக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு காலத்தில் அவசர காலச்சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பியும் அதனைப் பயன்படுத்தி தங்களுக்குத் துன்பம் விளைவிக்கப்படும் தற்போதுதான் அதன் பயங்கரத்தை உணர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மற்றும் சட்டம் என அனைத்தையும் அரசாங்கம் தவறாக கையாண்டு அடக்கியாண்டு கொண்டிருக்கின்றது. அவசர காலச்சட்டம் அப்பாவிகள் மீது பாய்கின்றது. அப்படியான நிலையில் இலங்கையை ஜனநாயக நாடாக காட்டும் முயற்சிகள் எடுபடவே மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

0 Responses to இலங்கையை ஜனநாயக நாடாகக்காட்ட அரசாங்கம் முயற்சி: விக்கிரமபாகு