சீனாவின் நிதி உதவியுடன் கோப்பாயில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தில் ஸ்ரீலங்காவின் 51 ஆவது படைத்தலைமையகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் வரலாற்று சின்னங்களை அழித்து படையினர் படைமுகாம்களையும் படையினரின் நினைவு சின்னங்களையும் அமைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஸ்ரீலங்காப் படையினரின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு சீனா அரசு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது. தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் அழிக்கப்பட்டு அங்கு படையினர் நிலைகொண்டுள்ளார்கள். அங்கு படையினரின் படைமுகாம்களும் காவலரண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு யாழ்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள மாவீரர்களின் கல்லறைகள் புல்டோசர்கள் கொண்டு தரைமட்டமாக அழிக்கப்பட்டு அங்கு சிறீலங்காவின் 51 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. இது நேற்று சிறீலங்கப் படைத்தளபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் வரலாற்றினை எடுத்துக்கூறும் மாவீரர்களின் நினைவுச்சின்னங்கள் அழிக்கப்டப்டு அங்கு படையினருக்கான நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஏ.9 வீதியின் இருமருங்கிலும் படையினரின் நினைவுச் சின்னங்களை காணக்கூடியதாக உளள்தாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். கனகராயன்குளம், மாங்குளம் பகுதிகளிலும் தற்போது கொக்காவில் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் அமைந்துள்ள பகுதியில் 1990 ஆம் ஆண்டு நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த படையினருக்கு பாரிய நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அறிவியல் நகர்பகுதியில் படையினரின் பாரிய முகாம் ஒன்று பெரும் எடுப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி இரணைமடுச் சந்திப் பகுதியில் படையினரின் நிலையான படைமுகாமும் புத்தர் கோவில்களும் அமைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்டப்ட லெப்ரினன் கேணல் சந்திரன் பூங்கா அழிக்கப்பட்டு அங்கு படையினரின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிளிநொச்சி நகர் மீட்பு வெற்றிசின்னங்கள் படையினரால் அங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது.
ஆனையிறவில் பாரிய சிங்கள இனத்துவேசத்தை காட்டும் போர் நடவடிக்கையின் வெற்றிசின்னம் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழர்தாயக பகுதிகளில் சிறீலங்காப்படையினர் தமிழ்மக்களின் வரலாற்று சின்னங்களை அழித்துவிட்டு சிங்கள வரலாற்று சின்னங்களை நிறுவிக்கொள்கின்ற செயற்பாடுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறீலங்காப் படையினரின் இச்செயற்பாடுகளுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நிதிஉதவி வழங்கிக்கொண்டுவருகின்றமை தமிழ்மக்கள் மத்தியில் கவலையளிக்கின்றன.
சங்கதி

0 Responses to இந்திய - சீன உதவிகளுடன் தமிழர் தாயகத்தில் சிறீலங்காவின் ஆக்கிரமிப்புச் சின்னங்கள்