Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லிபிய அரச தலைவர் கேணல் மொஹமூர் அல் கடாபி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட மனிதநேயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை சர்வதேச நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.

இதேவேளை அமெரிக்க அரச தலைவர் ஒபாமாவும் தேவையான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு தமது அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் லிபிய அரச தலைவர் கேணல் மொஹமூர் அல் கடாபியுடன் தொடர்புகொண்ட மகிந்த ராஜபக்ச, லிபிய அரசுடன் இணைந்து நிற்கும் என தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே லிபியாவில் பிரச்சினைகள் ஏற்படின் இலங்கையில் அடைக்கலம் வழங்க தயார் என மஹிந்த ராஜபக்ச, செய்தியை அனுப்பியிருந்தார்.

இந்த செய்தி தொடர்பில் அமெரிக்கா உட்பட்ட மேற்கத்தைய நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன.

மகிந்த ராஜபக்ச 2009 ஆண்டில் ஏப்ரலிலும் ஓகஸ்டிலும் இரண்டு தடவைகள் லிபியாவுக்கு பயணம் செய்திருந்தார். அதன்பின்னர் தனது மகனையும் நாடாளுமன்ற குழு சகிதம் இந்த வருடம் அனுப்பிவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழநேசன்

1 Response to லிபியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற விசாரணை ஆரம்பம்! லிபிய அரசுக்கு மகிந்த ராஜபக்ச ஆதரவு தெரிவிப்பு!!

  1. இளமாறன் தமி்ழ்நாடு‍

    கொடுங்கோலனுக்கு‍ அதை விட மிக பெரிய கொடுங்கோலன் தான் ஆதரவு தருவான். காடாபிக்கு‍ ராஜபக்ச்சே ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் தானும் கொடியவன் தான் என்று‍ பகிங்கரமாக ஒப்பு கொள்கிறோர்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com