Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துவதாக கூறி, வடக்கில் உள்ள வளங்களை கொள்ளையிட்டு வருவதாகவும் வசந்தம் என்ற பெயரில் இன்று வட பகுதி மக்களுக்கு மீதமாக இருப்பது குண்டும் குழியுமான 9 வீதியும் பல்தேசிய நிறுவனங்களின் விளம்பர பலகைகள் மாத்திமே என யாழ்ப்பாணத்தில் உள்ள மத தலைவர்களும், புத்திஜீவிகளும் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில், வடக்கில் உள்ள மண், மரம், மணல் போன்ற வளங்களை தென் பகுதிக்கு எடுத்துச் செல்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் தலையெழுத்து கொலையிலோ அல்லது கடத்திச் சென்று காணாமல் போக செய்ததிலோ முடிகிறது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தெற்காசிய ஊடக அமைப்பு, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லீம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகிய ஊடக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, அவர்களிடம் யாழ் மத தலைவர்களும், புத்திஜீவிகளும் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற 30 வருட ஆயுத போராட்டத்தை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் யுத்த ரீதியாக தோற்கடித்தது. இன்னும் இரண்டு மாதங்களில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு வருடங்கள் முடிவடையவுள்ளன. விடுதலைப்புலிகளை யுத்தம் மூலம் தோற்கடித்த பின்னர், இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கிழக்கின் உதயம் மற்றும் வடக்கின் வசந்தம் ஆகிய பெயர்களில் அபிவிருத்தி திட்டங்கள் இரண்டை ஆரம்பித்தார்.

இந்த அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வடபகுதி மத தலைவர்களும், புத்தி ஜீவிகளும், வடக்கின் வசந்தத்தை காணக்கூடிய ஒரே இடம் 9 வீதி என தெரிவித்தனர்.

9 வீதியில் பயணிப்பது என்பது புயலில் சிக்கிய படகை போன்றதாகும். இந்த வீதியில் பயணிக்கும் போது குடல்கள் தொண்ட வரை செல்லும். யுத்தத்தின் பின்னர், ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரை தொடரூந்து பாதையை அமைக்க தென் பகுதியில் உள்ள வறிய மாணவர்களிடம் தலா ஒரு ரூபாவை அரசாங்கம் வசூலித்தது. எனினும் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பின்னர், இந்த விடயங்களை ஆய்வு ரீதியாக மக்கள் மத்திக்கு கொண்டு செல்ல வடபகுதி ஊடகங்களுக்கு எந்த சந்தர்ப்பமும் கிடையாது. இதனால் தென் பகுதி ஊடகங்கள் இந்த சவாலை பொறுப்கேற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.யுத்ததிற்கு பின்னர், வடக்கு கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களையும் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை அரசாங்கம் பாரிய உதவிகளை செய்ததுடன் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் பிரதிபலான வடக்கில் பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் விளம்பரப் பலகைகள் முழு வடக்கை ஆக்கிரமித்துள்ளன.

ஓமந்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை பயணம் செய்யும் எவரும் இதனை காணமுடியும். அத்துடன் 9 வீதியின் ஒவ்வொரு 500 மீற்றர் தூரத்திற்கும் ஒரு இராணுவ பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கூறியுள்ளார். அதேவேளை இலங்கை அரசாங்கம் வடக்கை அபிவிருத்தி செய்வதாக கூறி விட்டு வடக்கில் உள்ள வளங்களை கொள்ளையிட்டு அதனை தென் பகுதிக்கு கொண்டு செல்வதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதிக்கு பின்னர், வடபகுதி மக்கள் சூறையாடல்களுக்கு உள்ளாகியுள்ளனர். தென் பகுதியில் உள்ள வங்கிகள் எமது மக்களின் பணத்தை சேகரித்து கொண்டு சென்றுள்ளன.

யாழ்ப்பாணம் என்பது தற்போது, தென்னிலங்கை மற்றும் இந்தியாவின் வர்த்தக சந்தை மாத்திரமே. இந்தியாவும் சீனாவும், வந்த நிர்மாணப் பணிகளுக்கான ஒபந்தங்களை மேற்கொள்கின்றன. இதில் உப ஒப்பந்தங்கள் எதுவும் வடபகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை அதனை உப ஒப்பந்தங்களும் தென் பகுதியை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகின்றன. போருக்கு முன்னர் திரட்சை பழங்களை தென் பகுதிக்கு விநியோகித்தவர்கள் யாழ்ப்பாண விவசாயிகள், தற்போது திராட்சைப் பழங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

திராட்சை பழங்கள் பயிரிட்ட காணிகளில் அதிகமான காணிகள் தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த காணிகளில் பயிரிட அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் யாழ்ப்பாண மாநகர முன்னாள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வசந்தம் என்ற பெயரில் வட பகுதி மக்களுக்கு மீதமாக இருப்பது வீதியும், விளம்பரங்களும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com