Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் பிரதம மந்திரி டி.எம்.ஜயரட்டவின் நாடாளுமன்ற உரை அவரின் முகத்தின் மீது பல முட்டைகள் வீசப்பட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சண்டே லேண்ட் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

தமது ஆசிரியர் தலையங்கத்தில் இந்த கருத்தை விமர்சித்துள்ளது குறித்த பத்திரிகை.

பிரதமமந்திரி டி.எம்.ஜயரத்ன, அவசரகால சட்டநீடிப்புக்காக மிகவும் கஸ்டப்பட்டு அறிக்கை ஒன்றை கடந்த வாரம் வாசித்தார்.

அதில் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் மூன்று முகாம்கள் உள்ளதாக புலனாய்வு தகவல்களை ஆதாரம் காட்டி அவர் தகவல் வெளியிட்டார்.

எனினும் இந்த விடயத்தை இந்தியா, முற்றாக மறுத்துள்ளமையானது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர், தமது உரைக்கு முன்னால் இந்த தகவல்கள் தொடர்பாக தேடிப்பார்த்தாரா? என சண்டே லேண்ட் செய்திதாள் கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு முன்னர் பலமுறை பாதிக்கப்படடு பின்னர் சரி செய்யப்பட்டது.

இந்தநிலையில் தற்போது அதற்கு பிரதமரின் உரை, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம், அரசத்துறையில் வினைத்திறனற்றவர்களின் பங்களிப்பே என ஐலேண்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சர்களின் உறவினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவாளர்களுமே இன்று இராஜதந்திர சேவையில் உள்ளீர்க்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இவர்களால் இன்று இராஜதந்திர மட்டம் தளர்ந்து போயுள்ளது.

இலங்கையின் பொதுமக்கள் வரி செலுத்தும் நிலையில், அரசியல்வாதிகள் மட்டுமே அதன் மூலம் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நிலையே இன்றுள்ளதாக சண்டே லேண்ட் தமது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to பிரதமரின் முகத்தில் முட்டை - "தமிழ்நாட்டுப் புலி" விவாகரம்: சண்டே ஐ லேண்ட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com