தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் அதனால் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என அதன் முக்கியஸ்தர் சிவஞானம் கருத்துவெளியிட்ட நிலையில் இன்று சம்பந்தன் அவர்களால் சென்னையிலுருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழரசுக்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தமிழர்களின் ஒருமித்த தேசிய கூட்டமைப்பாக முதன்மைப்படுத்தப்படவேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பின்னுக்கு தள்ளுவதன் மூலம் தமிழரசுக்கட்சியை முன்னுக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
பல கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவராக இருக்கின்ற இரா.சம்பந்தன் அவர்கள் தனியாக ஒரு கட்சியை முதன்மைப்படுத்துவது கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு பொருத்தமற்றது என்பதை உணரவில்லையா என்பதை அவர் தெளிவுபடுத்தவேண்டும்.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை தற்போதுள்ள நிலையிலுருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதை தவிர்த்து, தந்தை செல்வா காலத்திற்கு சென்று அங்கிருந்து மீள ஆரம்பிப்பதற்கு தமிழரசுகட்சிகள் முனைப்புக்காட்டுகின்றனவா என்ற சந்தேகம் உருவாகிவருகின்றது.
தடுமாறும் தமிழர்களின் தலைமைகளை ஒருமைப்பட்ட பாதையில் ஒன்றுபட்ட சக்தியாக பயணிக்க போதிய அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும் என்ற கருத்து தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
அண்மைய ஆதாரமாக இன்று சென்னையில் வெளியிடப்பட்ட அறிக்கையை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் தங்கள் மதிப்புமிக்க ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். இலங்கைத் தமிழரசுக்கட்சி(தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களில் போட்டியிடுகின்றது. தமிழ் வாக்காளர்கள் தங்களுக்குரிய பகுதிகளில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தவேண்டியது அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வாறு வாக்களிப்பதன் மூலம் தங்களுடைய ஜனநாயக உரிமையை வாக்காளர்கள் வெளிப்படுத்த வேண்டும். தங்களுடைய தீர்ப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை வாக்காளர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தமிழ்த் தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றன.
குறிப்பாக, யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவ்வாறான கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றைக்காண வேண்டும் என்ற எமது முயற்சி வலுப்பெற்று வந்துள்ளது. அவ்வாறான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவதில் மேலும் தாமதம் காட்டுவதற்கு நியாயம் கற்பிக்க முடியாது என்றும் நாம் வலியுறுத்தியுள்ளோம்.
வன்செயலின் முடிவு அவ்வாறான ஒரு தீர்வு காணப்படுவதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கின்றது என்றும் அவ்வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்றும் நாம் பலமாக வலியுறுத்தியுள்ளோம்.
எமது நிலைப்பாட்டுக்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பலமான ஆதரவு இருக்கின்றது. தற்போது நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்கள் தமிழ்மக்கள் தங்களுடைய ஜனநாயகத் தீர்ப்பின் மூலம் எமது நிலைப்பாட்டை அங்கீகரிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றது.
இந்த இலட்சியத்தை அடைவதற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் "வீடு' சின்னத்திற்கு வாக்களித்து அதன்மூலம் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு தமிழ் வாக்காளருக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உடனடித் தேவைகளைக் கவனிக்கவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக் காணவும் அரசு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை நடத்திக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் தேவைகள் பற்றிய தெளிவான புரிந்துணர்வுடனும் ஆழமான உறுதிப்பாட்டுடனும் இப்பேச்சுகளில் நாம் பங்குபற்றி வருகின்றோம்.
எமது முயற்சியை ஜனநாயக தீர்ப்பு மூலம் ஆதரித்து பலப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழ் மக்களை வேண்டிக்கொள்கின்றோம்.அண்மையில் முடிவுக்கு வந்த யுத்தம், ஆரம்பமாவதற்கு முன்பு நடந்தவை, யுத்தத்தின்போது நடந்தவை, யுத்தம் முடிந்த பின்னர் நடந்தவை, குறிப்பாக பல்வேறு மக்கள் மத்தியில் உண்மையான நல்லிணக்கத்தைக் காணும் முயற்சி ஆகியன உண்மை மற்றும் பதில் கூறும் பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிலைத்து நிற்கக்கூடியதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ்ப் பிரச்சினைக்குக் காணவேண்டியது அவசரமும் அத்தியாவசியமானதுமாகும்.
பல்வேறு மக்களிடையே அவ்வாறான விரும்புகின்ற, உண்மையான நல்லிணக்கத்தைக் காணுவதற்கு நியாயமான அரசியல் தீர்வு இன்றியமையாத தேவையாகும். தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவதன் மூலமே மாத்திரம்தான் வரலாற்று ரீதியாக தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ் பேசும் மக்கள் பாதுகாப்புடனும் கௌரவமாகவும் தங்களின் சட்டபூர்வமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார அபிலாஷைகளையும் பூரணமாகப் பெற்று வாழ்வதை உறுதிப்படுத்த முடியும்.
எமது இளம் சமுதாயம் மற்றும் எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்துக்கு இது அத்தியாவசியமானதாகும். அத்துடன் இன்னொருவரின் கருணையில் தங்கியிருக்காமல் தங்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த இலட்சியத்தை அடைவதற்கு தமிழ் மக்கள் மற்றும் அனைத்து அரசியல் சக்திகளும் ஐக்கியப்பட்டு பரிபூரண ஆதரவை வழங்க முன்வரவேண்டும் என்று நாம் வேண்டுகின்றோம். இந்த இலட்சியத்தை அடைவதற்குத் தேவையான நேர்மை மற்றும் பொது அர்ப்ப்பணிப்புடன் கூடிய தார்மீக பலமற்ற எந்த அரசியல் கட்சிகளுக்கும், குழுக்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று நாம் வேண்டுகின்றோம்.
வாக்குகளைப் பிரித்து தங்களின் வாக்குரிமையை வீணாக்க வேண்டாம் என்றும் நாம் தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
ஓரணியில் திரண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வீடு சின்னத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு நாம் வேண்டுகின்றோம்.
எந்த அரசியல் தீர்வும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதியானதும் நியாயமானதுமானதுமாக அமைவதற்கான முயற்சிகளை எடுப்போம் என்று வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் சகோதரர்களாகிய முஸ்லிம் மக்கள் மற்றும் ஏனையோருக்கும் நாம் உறுதி கூறுகின்றோம்.
இப்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தமிழரசுக்கட்சியை முதன்மைப்படுத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பை தரமிறக்க முயலும் கூட்டமைப்பின் தலைமைகள்!