Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா கற்கைநெறி மாணவர் ஒன்றியத்தின் அடாவடித்தனத்தால் கடந்த மாதம் மூடப்பட்ட கொழும்பு- 15 மட்டக்குளிய, உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று 1ம் வருட அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் நிகழ்வுக்கு நிறுவன பணிப்பாளரின் கட்டாய வேண்டுகோளின்படியே அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

1ம் வருட அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவிற்கும் இடையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின் போது பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பெற்றோர்கள் கற்கைநெறியை சிங்களமொழிக்கு மாற்றக்கோரி கூக்குரலிட்டனர்.

அத்துடன், கலந்துரையாடலுக்கு வருகைதந்த தமிழ் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பிரச்சினைகளை தமிழில் விளக்கமுற்பட்டபோது தமிழில் மொழிமாற்றம் செய்வதை எதிர்த்தும் கூக்குரலிட்டு தடுத்து நிறுத்தினர்.

அதேவேளை, இங்கு தமிழ் மாணவர்களுக்கு தகுதி இருந்தும் அனுமதிக் கடிதம் அனுப்பப்படாமை, விடுதி வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் தமிழ் மாணவர்கள் பெரும்பான்மை இன மாணவர்களால் தாக்கப்படுவது, 15% அதிகமான தமிழ் பேசும் மாணவர்கள் இருந்தும் மாணவர் ஒன்றியத்தினரால் தமிழ் கலாச்சர நிகழ்வுகள் நடாத்த தடைவிதிக்கப்பட்டமை போன்ற இனவாத அடாவடித்தனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே இந்நிகழ்வும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 Responses to இனவாதத்தின் உச்சம்! மட்டக்குளிய உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த சம்பவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com