Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 26.01.2011 அன்று சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் இலங்கை அகதிகள் விடயத்தில் புதிய சட்டத்திருத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலமைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கருதுகின்றது. இவர்களின் இந்த கருத்து தவறானதாகவே நாம் கருதுகின்றோம்.

சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International ) சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch), சர்வதேச அனர்த்தக்குழு (International Crisis Group) மற்றும் ஏனைய மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் இக் கருத்திற்கு முரண்பாடானதாகவே உள்ளது.

இச் சட்டத்திருத்தம் எண்னற்ற தமிழர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.எனவேதான் நாம் சுவிஸ் கூட்டாட்சித் தலைவர்களிற்கும், பாராளுமன்றத்திற்கும் இத் தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எவ்வித
திருத்தங்களும் மேற்கொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்தி எதிர்வரும் 02.04.2011 அன்று சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக ஓர் கவனயீர்ப்பு ஒன்றுகூடலை ஒழுங்குசெய்துள்ளோம். கீழ் உள்ள மனிதாபிமானக் கோரிக்கைகள் இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தும் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

*இலங்கை அரசாங்கம் அனைத்துலக போர்க்குற்றவிசாரனைக்கு அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலமே போர்க்குற்றவாளிகளை சட்டத்தின்
முன் கொண்டுவரமுடியும்.

*இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும்.

*அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனைத்து அரசியல் கைதிகளின் முகாம்களிற்கும் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
அனைத்து சுவிஸ் வாழ் தமிழ் பேசும் மக்களையும் அணி அணியாகத் திரண்டு நிர்க்கதியாய்; நிற்கும் எமது உறவுகளைக் காக்க உதவுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.

அத்துடன் ஒட்டுமொத்தத் தமிழர்களின் இந் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் விதமாக கையெழுத்து வேட்டை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான டொச், பிரன்ஞ், இத்தாலி மொழிகளின் படிவங்களையும் இணைத்துள்ளோம். நீங்கள் வாழும் நகரங்களில் சுயமாக கையெழுத்துக்களை சேகரித்து அனுப்ப விரும்பியவர்கள் கீழக், காணும் முகவரிக்கு அனுப்பவும்.

சுவிஸ் ஈழத்தமிழரவை

0 Responses to இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்தவும்! சுவிசில் ஒன்றுகூடல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com