இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மூலம் இலங்கைக்கு சாதகமான பலன்கள் கிட்டவுள்ளதாக அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளார் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹண உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று மத்திய மற்றும் தென்னாசிய விவகாரங்களுக்கான அமெ ரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளரான ரொபர்ட் பிளேக்கை சந்தித்து உரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையானது மோதல் இடம்பெற்ற பகுதி மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும் பாரியதொரு பின்புல சக்தியாக அமையும். அத்துடன் இலங்கைக்கு அபிவிருத்தியின் பாதையில் தொடர்ந்தும் பயணிக்கவும் அது உதவியாக அமையும்.
இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளும் தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் பிரஸ்தாப சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நிபுணர் குழுவின் அறிக்கை மூலம் இலங்கைக்கு சாதகம் கிட்டும்: ரொபர்ட்