Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நுவரெலியா மாவட்டத்திலும், வடக்கு - கிழக்கு மாகாணங்களிலும் நாளைய தினம் வாக்களிக்கச் செல்லும் தமிழ் வாக்காளர்கள் இன உணர்வுடன், கொள்கை நோக்கங்களுக்காக வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மலையக தமிழ் கூட்டமைப்பின் இணைத்தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்கள் இன்று இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். போருக்கு பின் தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் உட்பட அனைத்து பெரும்பான்மை கட்சிகளும் தவறிவிட்டன.

தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைக்கும் பெரும்பான்மை கட்சிகளும், அக்கட்சிகளுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கும் அணியினரும் தமிழ் மக்கள் தொடர்பில் நேர்மையான கொள்கையை பின்பற்றவில்லை. தமிழ் இனத்தின் அரசியல் பேரம் பேசும் சக்தியை சிதறடித்து, சின்னாப்பின்னப்படுத்துவது இவர்களது நோக்கங்களாக இருக்கின்றன.

மலையகத்திலே வறுமையிலே வாடி வதங்கிக்கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம், பெண் தொழிலாளர்களுக்கு ஆறு மணிநேர வேலை ஆகிய கோரிக்கைகள் முதன்மை பெற்றுள்ளன.

அதேபோல் வடகிழக்கில் மீள் குடியேற்றம், அரசியல் தீர்வு திட்டம் ஆகியவை முதன்மை தேவைகளாக வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில் இத்தகைய கோரிக்கைகளை நேர்மையுடன் முன்னெடுக்கும் கட்சிகளுக்கு தங்கள் வாக்குகளை தமிழ் வாக்காளர்கள் மலையகத்திலும், வடகிழக்கிலும் உறுதியுடன் வழங்கிடவேண்டும்.

இந்நிலையில் முதலாவது, நாடெங்கிலும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் வாக்காளர்களும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். எந்தவொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் கவனயீனமாக இருந்துவிடக்கூடாது.

இரண்டாவது, காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பில் கலந்துகொள்வதற்காக காலையிலேயே வாக்காளர் சாவடிக்குச் சென்று வாக்களித்துவிட வேண்டும். மூன்றாவது, தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குகளை இன உணர்வுடன் தமிழ் அரசியல் சக்திகளை பலப்படுத்தும் நோக்கிலும், தமிழ் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் நோக்கிலும் தெளிவுடன் பயன்படுத்த வேண்டும்.

0 Responses to மலையகத்திலும், வடகிழக்கிலும் இன உணர்வுடன் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்: மனோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com