விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தை நிறுத்தும் விருப்பம் இந்தியாவுக்கு இருக்கவில்லை என்று அமெரிக்கா கருதுவதாக விக்கிலீக்ஸ் அறிக்கை கூறுகின்றது.
அன்றைய காலகட்டத்தில் கொழும்பிலிருந்த அமெரிக்கத் தூதர் இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய செய்திக்குறிப்புகளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் பிரஸ்தாப தகவலை வெளியிட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்த காலத்தின் போது இந்தியா பல தடவைகள் அது குறித்து அறிக்கைகளை வெளியிட்டிருந்த போதும், அவை அனைத்தும் பொதுமக்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக அமெரிக்கா கருதியுள்ளது.
இந்தியாவின் அன்றைய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வருகை தந்தபின் வெளியிட்டிருந்த அறிக்கை கூட மிகவும் சுருக்கமானதாகவே இருந்தது. அதுவும் யுத்தத்தை நிறுத்துமாறு வற்புறுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை.
அந்த வகையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை நிறுத்த இந்தியா போதுமான அழுத்தத்தை வழங்கவில்லை என்று இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தன் தகவல் குறிப்பில் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்து.

0 Responses to விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தை நிறுத்தும் விருப்பம் இந்தியாவுக்கு இல்லை: விக்கிலீக்ஸ்