கடந்த வருடம் புலம்பெயர் தமிழர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு, மக்கள் அவைகளால் முன்னெடுக்கப்பட்ட மே 18, போர்க் குற்ற நாளின் இரண்டாவது ஆண்டின் எழுச்சி நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகள் எங்கும் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதி நாளான மே 18ம் நாள் நாம் அழுவதற்கான நாள் அல்ல. அது எழுவதற்கான நாள். முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டது என்று இறுமாந்து இருந்த போது, புலம்பெயர் தமிழர்கள் அதே நாளைப் போர்க் குற்ற நாளாகப் பிரகடனப்படுத்தி எதிரிமீது தாக்குதல் தொடுத்தார்கள். அந்த எழுச்சி வடிவம் சிங்கள தேசத்தை போர்க் குற்ற வழக்குகளையும், சர்வதேச நீதி விசாரணையையும் எதிர் கொள்ள வைத்துள்ளது.
இந்த வருடமும் அந்த நாளை போர்க் குற்ற நாளாக எழுச்சியுடன் நடாத்துவதற்கு புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு செய்து வரும் நிலையில், 11 ஆம் திகதி முதல் 20 அம் திகதி வரையிலான இரண்டு வார கால நாட்களில், எங்கள் மண்ணுக்காக எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும், எதுவும் அற்றவர்களாக வீசப்பட்டும் எங்கள் உறவுகள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு நாட்களை நினைவு கூர்ந்து, அந்த நாட்களில் தமிழர்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் விளக்கேற்ற, அவர்களது ஆத்ம சாந்திக்காக வேண்டுதல் செய்யுமாறு கோரிக்கையும் விடுத்துள்ளார்கள். அதே நேரத்தில் மே 18 ஆம் திகதி அணைத்து புலம்பெயர் நாடுகளிலும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.
அத்துடன் இந்த காலப்பகுதியில் ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் சிறி லங்காவில் 1917 ஆம் ஆண்டு முதல் தமிழ் இனத்துக்கு எதிராக நடைபெற்றது ஒரு இன சுத்திகரிப்பு, அது ஒரு இனப்படுகொலைக்கான அத்தனை ஆதாரங்களையும் கொண்டது என்ற ஆய்வு கூட்டங்களும் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டு கொண்டிருகிறது. அதற்குரிய நிகழ்ச்சி நிரல்கள் பின்னர் எல்லோருக்கும் அறிவிக்கப்படும்.
முள்ளிவாய்க்கால் முற்றுப் புள்ளியல்ல. அது இன்னொரு போர்க் களத்திற்கான ஆரம்பம். எதிரியை முறியடித்து, எம் தமிழீழத்தில் புலிக்கொடி ஏற்றும்வரை அழுவதற்கு மறுப்போம். எரியும் உணர்வுகளைக் கனலாக்கி எம் தேசத்தை மீட்க எழுவோம்! நாம் ஒன்றாக எழுவோம்!!
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!
தமிழிழ மக்கள் பேரவைகள்
தொடர்பு: info.makkalavai@gmail.com

0 Responses to போர்க்குற்ற நாளின் இரண்டாவது ஆண்டில் புலம்பெயர் தமிழர்கள்!: அனைத்துலக தமிழீழ மக்கள் பேரவைகள்