சீனாவில் கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் அங்கு 11 மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அனர்த்தத்தினால் அங்கு 56 பேர் வரை பலியாகி இருப்பதாகவும் 22 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
ஹுனான் மாகாணத்தில் மட்டும் கிசியாங்ஜியாங் நதி முன்னெப்போதும் இல்லாதவாறு 39.5 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் தாழ்வான பகுதியிலுள்ள 27 000 வீடுகள் முற்றாக சேதமடைந்ததாகவும் மேலும் அனைத்து மாகாணங்களிலும் 37 000 வீடுகள் குறிப்பிடத்தக்களவு சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாகாணத்தில் மட்டும் 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெள்ளத்தால் சீனாவுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 25.27 பில்லியன் யுவான்கள் என்றும் நிவாரணப் பணிகளுக்காக சீன அரசு முதற்கட்டமாக 1.88 பில்லியன் யுவான்களை ஒதுக்கி இருப்பதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Responses to சீனாவில் கனமழை வெள்ளத்துக்கு 11 மாகாணங்கள் பாதிப்பு : 56 பேர் பலி