சனல்4 தொலைக்காட்சி நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள காணொளி முற்றிலும் பொய்யானதாகும். அந்நிறுவனமானது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் எமக்கில்லை. இவ்வாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்றுமுன் நிறைவடைந்தது. அதில் கலந்துகொண்டு சனல்4 வெளியிட்டுள்ள புதிய காணொளி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இந்த வருடத்துக்குள் அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 காணொளி பொய் என கூறி இராணுவத் தரப்பும் நிராகரிப்பு
இதேவேளை, பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் - 4 இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்ற ஆதாரமெனக் கூறி நேற்றைய தினம் ஒளிபரப்பிய புதிய 13 நிமிடக் காணொளித் தொகுப்பினையும் பொய்யானது எனக் கூறியுள்ள இலங்கை இராணுவத் தரப்பு, அதனை முற்றாக நிராகரித்துள்ளது.
நேற்றைய தினம் ஒளிபரப்பான குறித்த காணொளியில் இலங்கையின் யுத்தகளத்தில் இருந்த வீரர்களான தளபதி சவேந்திர சில்வா உட்பட்ட இருவர் கருத்துகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to சனல் 4 காணொளி முற்றிலும் பொய்யானது!: கெஹலிய