சுவிஸ் ஈழத்தமிழரவை மற்றும் சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸின் தலைநகரமான பேர்ண் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள Waisenhausplatz என்னுமிடத்தில் 28 ம் ஆண்டு கறுப்பு யூலை நினைவுகூரப்பட்டது.
நேற்று 28.07.11 பிற்பகல் 15.00 மணிக்கு கறுப்பு யூலை நினைவுகூரல் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டு நிகழ்வு தொடர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, சுவிஸ் ஈழத்தமிழரவையின் பிரதிநிதிகள், சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமூக உணர்வாளர்களின் நினைவுரைகள் இடம்பெற்றன.
நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் இன்றைய தாயகத்தின் நிலைமைகளை விளக்கிய துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
பார்வையாளர்களாக சமூகமளித்த பல்லின மக்கள் ஒவியங்களைப் பார்வையிட்டதுடன் எம் உறவுகள் படும் துயர்களை அறிந்து சென்றனர்.
இறுதியாக வலிகளிலிருந்து 'மீள் எழுச்சி கொள்வோம்' என்ற உறுதிமொழியுடன் தாரக மந்திரம் உரைக்கப்பட்டு கறுப்பு யூலை நிகழ்வு நிறைவடைந்தது.
சுவிஸ் ஈழத்தமிழரவை மற்றும் சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு



0 Responses to சுவிஸில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு